Categories: Cinema News Gossips latest news

முதலில் அஞ்சலி.. இப்போ குட்டி நயன்தாரா.! குறி வைத்து காத்திருக்கும் ‘அந்த’ இளம் நடிகர்.!

நல்ல திறமையான நடிகைகள், இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வருவார்கள் என நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் திடீரென அந்த நாயகி ஏதேனும் ஒரு நடிகரோடு ஊர் சுற்றியோ, வேறு ஏதாவது பார்ட்டி என தனது கேரியரை சொதப்பி விடுவர்.

அப்படிதான் அங்காடி தெரு, கற்றது தமிழ் , எங்கேயும் எப்போதும் என நல்ல திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி நல்ல நடிகையாக வளர்ந்து வந்தார் ஆனால், உடன் நடித்த நடிகர் ஜெய் உடன் அஞ்சலி காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

இதையும் படியுங்களேன் –  மீண்டும் விஜய் ரூட்டுக்கு தாவிய விஷால்.! வெளியான புது போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

 

இருவரும் லிவிங் டூ கெதர் எனும் திருமணம் ஆகாமல் இருவரும் வாழ்ந்து வருகின்றனர் என்றெல்லாம் கூறப்பட்டது. அதன் பிறகு அஞ்சலி மார்க்கெட் சரிந்து போனது. தற்போது தமிழில்  வாய்ப்பு அவருக்கு பெரிதாக இல்லை.

சின்னத்திரையில் நன்றாக நடித்து குட்டி நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை வாணி போஜன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்களேன் – குருபக்தியில ரஜினி, கமலையெல்லம் மிஞ்சிடுவார் போல விசே!…வியப்பூட்டிய புதிய தகவல்!…

 

ஆனால், அவர் தற்போது கதை கேட்கும் போதெல்லாம் நடிகர் ஜெய்யும் உடன் இருக்கிறாராம்.  இதனால் கதை சொல்ல போகிறர்வர்கள் என்ன சொல்வது என தெரியாமல் திரும்பி வந்து விடுகின்றனராம். இதனால் அஞ்சலி போல இவரும் காணாமல் போய் விடுவாரோ என கூறிவருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan