முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குனர் பிரதீப் ரெங்கனாதன். ஜெயம் நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தை முழு நீள காமெடி படமாக கொடுத்து ரசிகர்கள் மனதிலும் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றவர்.
அந்த படத்திற்கு பிறகு ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்த பிரதீப் அது நடக்க வில்லை என்று தெரிந்ததும் ஒரு ஷார்ட் மூவியை தயாரித்திருக்கிறார். அதை எடுக்கும் போதே ஒரு திரைப்படமாக வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்து படமாக தயாரிக்க நினைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரஜினியின் மாஸ் ஹிட் திரைப்படத்தை வாங்கி வெளியிட்ட கமல்ஹாசன் … இதெல்லாம் நம்பவே முடியலையே!!
அதுதான் ‘லவ் டுடே’ திரைப்படம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க பிரதீப்பே கதாநாயகனாகவும் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு போன்றோரும் நடிக்கின்றனர். இதுவும் காமெடி படமாக அமைந்திருக்கிறது. இந்த படம் வருகிற 4 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன் இந்த படத்தின் டிரெய்லரை பார்த்து வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி ஆச்சரியத்தில் இருக்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லரை பற்றி பேசிய வம்சி என்ன படம் அது? செம ஸ்கிரிப்ட் என்று ஒரு பேட்டியின் போது தன் உணர்ச்சிகளோடு கூறினார். மேலும் புதுமுக இயக்குனர்களின் வளர்ச்சியையும் கண்டு ஆரவாரம் செய்தார் வம்சி.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…