வதந்தி சீசன் 2 வரப்போகுது!.. டிரைலரில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா?
பிரைம் வீடியோவின் வெற்றிகரமான தமிழ் ஒரிஜினல் கிரைம் திரில்லர் தொடரான வதந்தியின் இரண்டாவது சீசனான 'வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி'யின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கியுள்ள இந்த தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த சீசனில் எம். சசிகுமார், நேர்மையான காவல் அதிகாரி SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வெளியாகியுள்ள டிரெய்லரில், ஜல்லிக்கட்டு திருவிழாவை மையமாகக் கொண்ட மதுரையின் கலாச்சார பின்னணி, பதற்றமான விசாரணை, அதிரடி சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இடம் பெற்றுள்ளதால், சஸ்பென்ஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான பயணமாகவும் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
'வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி' ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழுடன் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும் வெளியாகிறது. மேலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
