Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாடிவாசல் பட வேலை ஸ்டார்ட்!… செம அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்….சூர்யா ஃபேன்ஸை கையில புடிக்க முடியாது….

வாடிவாசல் பட வேலை ஸ்டார்ட்!… செம அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்….சூர்யா ஃபேன்ஸை கையில புடிக்க முடியாது….

3e2c805be7e9cfd526c20df2a4b5aab7

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என சிறப்பான படங்களை இயக்கியவர் வெற்றி மாறன். அவர் இயக்கத்தில் வெளியான அசுரன் ரூ.100 கோடியை வசூல் செய்தது. தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். குறிப்பாக வெற்றிமாறன், தனுஷ், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி என்றாலே அது சிறப்பான படமாக வெளிவரும்.   

f3af53c8c016f8daddd684f493442341

அசுரனுக்கு பின் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க ‘வாடிவாசல்’ திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் டேக் ஆப் ஆகவில்லை. சூர்யாவும் வெவ்வேறு படங்களில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். வெற்றி மாறனும் சூரி படத்தில் பிஸி ஆகி விட்டார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. எனவே வெற்றிமாறன் – சூர்யா கூட்டணி இணையுமா? வாடிவாசல் படம் துவங்குமா? என சூர்யா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வாடிவாசல் படத்தின் பட வேலை தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தின் இசைப்பணியை துவங்கிவிட்டதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சூரி படத்தை முடித்த வெற்றிமாறனும், பாண்டிராஜ் படத்தை சூர்யாவும் முடித்த பின் சூர்யா-வெற்றி மாறன் இணையும் வாடிவாசல் படம் துவங்கும் என தெரிகிறது. இத்திரைப்பம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுவை மையமாக கொண்டது.

இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top