Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாடிவாசல் பட்ஜெட் இத்தனை கோடியா?.. இது வேலைக்கு ஆகுமா?.. வாயடைச்சு போன தயாரிப்பாளர்…..

வாடிவாசல் பட்ஜெட் இத்தனை கோடியா?.. இது வேலைக்கு ஆகுமா?.. வாயடைச்சு போன தயாரிப்பாளர்…..

3e2c805be7e9cfd526c20df2a4b5aab7

தமிழ் சினிமாவில் சிறப்பான திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அவரின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்தது. மேலும், விருதுகளையும் குவித்துள்ளது.

ஒருபக்கம், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அது டேக் ஆப் ஆகவில்லை. சூர்யாவும் வேறு படங்களில் நடிக்க சென்றுவிட்டார். வெற்றிமாறனும் சூரி-விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்க சென்றுவிட்டார்.  எனவே, அந்த திரைப்படம் டேக் ஆகுமா இல்லையா என்பது தெரியாமல் சூர்யா ரசிகர்கள் இருந்து வந்தனர்.

f3af53c8c016f8daddd684f493442341

இந்நிலையில், இப்படத்தில் பட்ஜெட்டை வெற்றிமாறன் தாணுவுக்கு அனுப்பியுள்ளார். அதில், படத்தில் மொத்த பட்ஜெட் ரூ.98 கோடி எனவும், தன்னுடைய சம்பளம் ரூ.20 கோடி எனவும், சூர்யா சம்பளம் ரூ.28 கோடி எனவும், 120 நாட்கள் படப்பிடிப்பு, படப்பிடிப்பு செலவு ரூ.30 கோடி எனவும் குறிப்பிட்டிருந்தாராம். ஆனால், நடிகருக்கேற்ற சம்பளம், பட்ஜெட், வியாபாரம் என இதில் கில்லாடியான தாணு இந்த வாடிவாசல் படத்தை இந்த பட்ஜெட்டில் எடுக்கலாமா வேண்டாமா என யோசித்து வருகிறாராம்…

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, சூர்யாவும், வெற்றிமாறனும் தங்களின் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே வாடிவாசல் ரசிகர்களின் பார்வைக்கு வரும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top