Categories: Cinema News latest news

வாய்ப்பு கொடுத்தும் அடங்கலயே!.. சந்திரமுகி படத்தில் இருந்து விலகுகிறாரா வடிவேலு?…

கவுண்டமணி, செந்தில் இவர்களுக்கு பிறகு தனது நகைச்சுவையால் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தியவர் வைகைப்புயல் வடிவேலு. நடிகர் ராஜ்கிரணின் அறிமுகமான வடிவேலு தன்னுடைய உடல் அசைவுகளாலேயே மக்களை ரசிக்க வைப்பவர்.

rajini vadivelu

எல்லாவிதமான உணர்ச்சிகளையும் தன் உடல் அசைவுகளால் அதை காமெடியாக தருவதில் வல்லவர் நடிகர் வடிவேலு. தொடர்ந்து முன்னனி நட்சத்திரங்கள் அனைவருடன் பணிபுரிந்த வடிவேலு தவளை தன் வாயால் கெடும் என்பதற்கிணங்க சில காலம் தன் வாய்பேச்சால் சிக்கி சினிமாவை விட்டு இரண்டு காலம் விலகி இருந்தார்.

இதையும் படிங்க : அகங்காரத்தால் அழிந்த நடிகர்கள்!.. வாய்ப்புகள் வந்தும் பயன்படுத்த தவறிய தமிழ் பிரபலங்கள்!..

மீண்டும் சந்திரமுகி படத்தின் மூலம் தன் நகைச்சுவையை பிரதிபலிக்க வருகிறார் வடிவேலு. சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இப்போது இவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சந்திரமுகி படம் மட்டும் தான்.

vadivelu

ஆனாலும் அந்த படத்திலும் நீடிப்பாரா என்ற கேள்வி இப்போது பரவிக் கொண்டு வருகிறது. சந்திரமுகி படத்தில் நடிக்கும் போது வாசுவிடம் மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டு தான் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. ஆனால் நாய் சேகர் படத்தின் ஒரு சில காட்சிகள் விடுபட்டு இருந்ததால் சந்திரமுகி படத்தின் காட்சிகளையும் ரத்து செய்து விட்டு நாய் சேகர் படத்திற்காக கிளம்பி விட்டாராம் வடிவேலு.

இது ஒரு பக்கம் வாசுவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் கோபமடைந்த வாசு வடிவேலு இதுவரை நடித்த காட்சிகள் வரை இருக்கட்டும் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். மேலும் இந்த சந்திரமுகி படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருந்து இப்போது லைக்கா நிறுவனத்திற்கு கை மாறியிருக்கிறதாம்.

இதையும் படிங்க : எம்மதமும் சம்மதம்!.. மகளுக்காக கோயில் கோயிலாக சுற்றும் ரஜினி!.. அட என்னவா இருக்கும்?..

இதற்கும் நான் தான் காரணம் என்று ஓப்பனாகவே சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. ஏனெனில் நாய் சேகர் படம் லைக்கா நிறுவனம் தான் தயாரித்தது. அதன் பேரில் நான் சொன்னதால் தான் சந்திரமுகி படமும் இப்போது லைக்கா நிறுவனம் சென்றிருக்கிறது என்று கூறினாராம்.

vadivelu

இதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் வடிவேலு மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாக தெரிகிறதாம். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் தான் அப்போ இதுக்கு மேல் சந்திரமுகி படத்தில் எப்படி நீடிப்பார் என்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனாலு வடிவேலுவை வைத்து கிட்டத்தட்ட 20 நாள்கள் சூட்டிங் எடுத்து முடித்திருக்கிறார் வாசு.

இப்பொழுது அவருக்கு பதில் இன்னொருவர் என்றால் முடியாத காரியம் ஆகும். ஆகவே எடுத்த வரைக்கும் போதும் என்ற முடிவில் தான் இருப்பார்களே தவிர வடிவேலுவுக்கு பதில் மற்ற ஒரு நடிகரை மீண்டும் முதலில் இருந்து நடிக்க வைக்க மாட்டார்கள் என்று கூறிவருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini