×

வயிறு குலுங்க சிரிக்க... கொரோனா தடுப்பூசியின் வடிவேலு வெர்ஷன்

தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது எப்படி நம் உடம்பில் கொரோனாவை விரட்டி அடிக்கிறது என்பதை நம் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் கடவுளான வடிவேலுவை வைத்து அழகாக காட்டியிருக்கிறார்கள்.
 
download

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் சுனாமியாக மாறி வீசிக் கொண்டிருக்கிறது. திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா பற்றிய பேச்சு தான். மயானங்களுக்கு சென்று வருபவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களை மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தடுப்பூசி போடுவதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம் மக்களுக்கு இருக்கிறது. தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரத் தானே செய்கிறது என்கிறார்கள் சிலர். தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தீவிரமாகாமல் இருக்கும் என்று அனுபவப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது எப்படி நம் உடம்பில் கொரோனாவை விரட்டி அடிக்கிறது என்பதை நம் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் கடவுளான வடிவேலுவை வைத்து அழகாக காட்டியிருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியின் வடிவேலு வெர்ஷன் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News