×

என்னை நடிக்க விடாம டார்ச்சர் செய்தார் வடிவேலு - மனம் குமுறிய பெஞ்சமின்

தமிழ் சினிமாவின் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு. இவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு அத்தனை படங்களிலும் இவரது காமெடி காட்சிகள் இடம்பெற்றுவிடும்.

 

அந்தவகையில் கடந்த 2000 ம் ஆண்டு சேரன் இயக்கி வெளிவந்த வெற்றி கொடிக்கட்டு படத்தில் வடிவேலு- பார்த்திபன் காம்போவில் இடம்பெற்ற காமெடி மிகவும் பிரபலமான ஒன்று. இந்த படத்தில் பார்த்திபன், முரளி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள்  நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வடிவேலுவுடன்   நடித்த அனுபவம் குறித்து பகிந்துகொண்ட பெஞ்சமின், " படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் ஷூட்டிங்கிற்காக நான் சேரனை முதல்நாள் சந்தித்தபோது அவர் என்னை ஒரு மரத்திற்கு அருகில் சேர் போட்டு அமர சொன்னார்.

இப்படியே 18 நாட்கள் சென்றது பின்னர் இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று சொன்னார்கள். இதனால் சேரனிடம் சென்று நான் ஊருக்கு போகிறேன் என்று சொன்னேன்.ஆனால் அவரோ, வடிவேலு வராததால் தான் உங்களின் காட்சிகளை எடுக்க முடியவில்லை நாளை வடிவேலு வருகிறார் உங்கள் காட்சிகளை எடுக்கலாம் என்று சொன்னார்.

பின்னர் வடிவேலு வந்ததும் அவரை திட்டும் அந்த காட்சி எடுக்கப்பட்டது. ஆனால், அவரை திட்டும் போது என்னை வசனம் பேச விடாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படியே 4 ரீல்கள் சொல்லிக்கொண்டே இதனால் ஆத்திரமடைந்த சேரன் 60,000 ரூபாயை போய்விட்டது என்று சொன்னார். பிறகு ஏன் கெட்ட வார்த்தையில் திட்ட யோசிக்கிறீங்க ? என்று சேரன் கேட்டதும் நான் வடிவேலு கேமராவுக்கு பின்னால் செய்வதை சேரனிடம் கூறினேன்.

பின்னர் வடிவேலு இல்லாத நேரத்தில் அந்த காட்சியில் அவரை நீ என்னவெல்லாம் திட்ட நினைக்கிறாயோ அதை திட்டு என்று பார்த்திபன் சொன்னார். அதன் பின்னர்தான் அந்த காட்சி நன்றாக வந்தது.அதன் பின்னர்தான் வடிவேலு என்னிடம் வந்து என்னையா திட்ன , எப்படி நீ ஊருக்கு போகிறேன் என்று நான் பார்க்கிறேன் என்று மிரட்டியதுடன் சேரனிடம் அந்த காட்சியை நீக்க சொன்னார். ஆனால், அவர் அதை கேட்டவில்லை என பெஞ்சமின் தனக்கு நடந்த கொடுமைகளை கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News