வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’என்கிற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில், நடிக்க ஷிவானி ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் முன்னதாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வடிவேலுடன் ஷிவானி நடிக்கிறார் என்ற செய்தி உண்மையாக இருந்தால் அது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும். இந்த செய்தி உறுதி செய்யப்பட்டு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஷிவாங்கி ஆகியோரும் முக்கிய நகைச்சுவை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், இலங்கை மற்றும் லண்டனில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…