×

நான் மேடையில் பேசியதை வடிவேலு தவறாக எண்ணிவிட்டார் – மனம் திறந்த விவேக் !

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு பற்றி நடிகர் விவேக் மனம் திறந்து பேசியுள்ளார்.

 

நகைச்சுவை நடிகர்கள் விவேக்கும் வடிவேலுவும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து கலக்கியுள்ளனர். ஆனால் அதன் பிறகு இருவரும் ஒன்றாக நடிப்பதை நிறுத்திவிட்டு தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். அதில் வடிவேலு காமெடிகள் மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்து நின்று பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விவேக் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்கும் வடிவேலுவுக்கும் இடையிலான நட்புப் பற்றி பேசியுள்ளார். அதில் ‘நாங்கள் சேர்ந்து நடித்த போது எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. ஏனென்றால் எங்கள் இருவருக்குமான பாணி வேறு வேறு. ஆனால் ஒரே ஒரு முறை அவர் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது ‘நல்லா பேசறியா… நேத்து நைட்டே எழுதி வச்சுட்டியா?’ எனக் கேட்டேன். அதை மட்டும் அவர் தவறாக நினைத்துக்கொண்டார் என நினைக்கிறேன்.

அவர் எந்த நேர்காணலிலும் என்னைப் பற்றி பேசியதில்லை. ஆனால் நான் பல முறை அவரைப் பற்றி பலமுறை நான் பேசியுள்ளேன்’ எனக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News