Connect with us

Cinema News

சொந்த மகனா இருந்தாலும் அதை செய்ய முடியாது!. மகனின் ஆசைக்கு தடைப்போட்ட வடிவேலு…

நடிகர் ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. அவர் சினிமாவில் நடிகராக அறிமுகமான அதே காலக்கட்டத்தில் கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்கள் சினிமாவில் பெரும் நகைச்சுவை நட்சத்திரங்களாக இருந்தனர்.

இருந்தாலும் வடிவேலு தன்னுடைய தனிப்பட்ட நடிப்பை காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழில் பிரபலமாக உள்ள பெரும் நட்சத்திரங்கள் அனைவரோடும் நடித்துவிட்டர் வடிவேலு.

ஆனால் தற்சமயம் அவரை குறித்து அதிகமான எதிர்மறையான விமர்சனங்கள் வருவதை பார்க்க முடிகிறது. சினிமாவில் அவருடன் பணிப்புரிந்த பிரபலங்கள் பலரும் அவரை குறித்து எதிர்மறையான விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

பத்திரிக்கையாளர் அளித்த பதில்:

இது மக்கள் மத்தியில் வடிவேலு குறித்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சரி அவரது குடும்ப வாழ்க்கையில் வடிவேலு எப்படி இருந்தார் என்பதற்கு பத்திரிக்கையாளர் அந்தனன் ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது வடிவேலு அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே நிறைய நன்மைகளை செய்துள்ளார்.

Vadivelu

Vadivelu

ஆனால் அவரது மகனுக்கு சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவரால் சினிமாவில் கதாநாயகனாக முடியாது என நினைத்தார் வடிவேலு. எனவே அவரது மகனுக்கு வாய்ப்பை வாங்கி தராமல் விட்டுவிட்டார் வடிவேலு.

இதனால் வடிவேலுவிற்கும் அவரது மகனுக்கும் பிரச்சனையானது. அதை தவிர குடும்ப வாழ்க்கையில் அவர் வேறு எந்த தவறும் செய்ததில்லை என அந்தனன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நானும் சில்கும் ஒன்னா இருக்கும் போது பாத்துட்டாங்க! – நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

Continue Reading

More in Cinema News

To Top