
Cinema News
இப்டி செஞ்சா எப்டி வாய்ப்பு கிடைக்கும்.! வடிவேலு வளைச்சி வளைச்சி வம்பிழுத்த நடிகர்கள் லிஸ்ட் இதோ..
Published on
தமிழ் சினிமாவில் இந்த நடிகர் எப்போது கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நடிகர்களில் முக்கியமானவர் என்றால் அது வடிவேலு தான். கடந்த பத்து வருடங்களாக திரைத்துறையில் சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்றாலும் தற்போது வரை அவரின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பத்து வருடம் கழித்து திரைத்துறையில் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கினாலும், தற்போதும் ஹீரோவாக கம்பேக் கொடுக்கிறார் வடிவேலு. இது சில முன்னணி ஹீரோக்களுக்கு கூட அமையாத ஒன்று. வடிவேலுக்கு அது அமைந்துள்ளது. ஆனாலும், அப்படிப்பட்ட வடிவேலு சில நடிகர்கள் படத்தில் நடித்தது இல்லை அல்லது திரும்பவும் நடித்ததில்லை. அப்படிப்பட்ட லிஸ்ட் கொஞ்சம் பெருசாக தான் இருக்கிறது.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய திரைப்படங்களில் வடிவேலு முதன் முதலாக நடித்த திரைப்படம் வின்னர். அந்த திரைப்படத்தின் காமெடி பெரிய ஹிட் ஆகவே, அதனை தொடர்ந்து கிரி, லண்டன் போன்ற படங்களில் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்தார். ஆனால், சுந்தர் சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தில் முதல் பாதியில் வடிவேலு, இரண்டாம் பாதியில் சந்தானம் இருப்பார்.
இதையும் படியுங்களேன் – சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மொத்த கதையுமே இதுதான்.! இப்படி லீக் ஆயிடுச்சே.!
இது வடிவேலுக்கு தெரியாது. இறுதியில் படம் பார்த்த பிறகு தெரிந்து கொண்ட வடிவேலு, என்னிடம் சொல்லாமல் அந்த நடிகரை (சந்தானத்தை ) நடிக்க வைத்துவிட்டார்கள் என, இனிமேல் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து அதன் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வெகுநாட்களாக வடிவேலு நடிக்கவில்லை. நகரம் படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க முதலில் கமிட் ஆனது வடிவேலு. அதன் பின்னர் நடிகர் தனுஷுக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக அவர்கள் தற்போது வரை இணைந்து நடிக்கவில்லை.
அதேபோல நடிகர் அஜித்குமார் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் ராஜா. இந்த திரைப்படஷூட்டிங்கின் போது அஜித் மற்றும் வடிவேலு இடையே மனக்கசப்பு ஏற்பட்ட காரணத்தால் அதன் பிறகு வடிவேலு, அஜித் உடன் இணைந்து நடிக்கவே இல்லை.
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...
இளம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Leo, coolie ஆகிய இரண்டு படங்களாலும் அருக்கு இருந்த...