×

வடிவேலு எனும் தீர்க்கதரிசி – மருதமலை பாணியில் தப்பிச் சென்ற கைதி !

காஞ்சிபுரத்தில் விசாரணைக் கைதியாக இருந்த கைதி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பித்துச் சென்றுள்ளார்.

 

காஞ்சிபுரத்தில் விசாரணைக் கைதியாக இருந்த கைதி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பித்துச் சென்றுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். அந்த பகுதியில் பிரபலமான இவர் நகைத் திருட்டு, வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருடுதல் என பல வழக்குகளில் சிக்கி இப்போது விசாரணைக் கைதியாக உள்ளார். இந்நிலையில் ஒரு வழக்குக்காக அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் ஆயுத பிரிவு போலீஸார்.

நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட வழியில் வெங்கடேசன், செங்காட்டில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்று இரவு உணவு சாப்பிட விரும்புவதாக சோகமாகக் கூறியுள்ளார். அவரிம் நடிப்பை நம்பி காவலர்களும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வெங்கடேசன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, காவலர்கள் வெளியே இருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் வீட்டினுள் சென்று பார்க்க அவர் பின்புறமாக தப்பித்துச் சென்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

இதையடுத்து நூதனமாக தப்பித்த வெங்கடேசனை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இது சம்மந்தமாக அவரை தப்பிக்க விட்ட போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கையாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News