Categories: Cinema News latest news throwback stories

பல வருஷ பழக்கவழக்கமா இருந்தாலும் வடிவேலுக்கிட்ட அதான் நிலைமை… விஜய் படத்தில் நடந்த தகராறு!..

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக வடிவேலு இருக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவேலு. வடிவேலு சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்.

ஆனாலும் தொடர்ந்து தனது தனிப்பட்ட நகைச்சுவை திறனை காட்டி சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். வடிவேலு எந்த நடிகருடன் நடித்தாலும் அந்த நடிகருக்கும் வடிவேலுவிற்குமான காம்போ நல்ல நகைச்சுவையை கொடுத்துவிடும்.

முக்கியமாக விஜய், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் இவர் நடித்த படங்களில் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார் வடிவேலு. எனவே எப்போதும் வடிவேலுவின் நகைச்சுவைக்கு தமிழ் சினிமாவில் டிமாண்ட் இருந்து வந்துள்ளது.

தற்சமயம் மாமன்னன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு. ஆனால் தமிழ் சினிமாவில் வடிவேலு குறித்து தொடர்ந்து அவப்பெயர்கள் வந்த நிலையில் உள்ளன. வடிவேலு குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மீசை ராஜேந்திரன் கூறும்போது பொதுவாக வடிவேலு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வரமாட்டார் என கூறியிருந்தார்.

அதே போல வில்லு படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது வடிவேலு விஜய்யை முதன் முதலாக சந்திக்கும் காட்சி வரும். அதை படம் பிடிக்கும்போது வடிவேலு அதில் ஒழுங்காக நடிக்காமல் இருந்துள்ளார். இதனால் பலமுறை ரீ டேக் எடுத்துள்ளார் பிரபு தேவா.

அப்போதும் கூட வடிவேலு ஒழுங்காக நடிக்காமல் டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் கடுப்பான பிரபு தேவா சத்தம் போட துவங்கியுள்ளார். இத்தனைக்கும் பிரபுதேவாவும் வடிவேலுவும் பல வருடமாக நட்பில் உள்ளனர்.

அப்படியிருக்கையில் பிரபுதேவாவிடமே இப்படி நடந்துக்கொள்பவர் அறிமுக இயக்குனர்களிடம் எப்படி நடந்துக்கொள்வார் என பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன்.

இதையும் படிங்க: இந்த படம் ரிலீஸ் ஆனா நான் புடவை கட்டிக்கிறேன்.. எம்.ஜி.ஆர் கிட்டயே சவால்விட்ட விநியோகஸ்தர்!..

Published by
Rajkumar