1. Home
  2. Latest News

10 பேரு சேர்ந்து சினிமாவை அழிக்கிறாங்க.. அவர்களை தூங்க விடக்கூடாது.. வடிவேலு ஆவேச பேச்சு

10 பேரு சேர்ந்து சினிமாவை அழிக்கிறாங்க.. அவர்களை தூங்க விடக்கூடாது.. வடிவேலு ஆவேச பேச்சு

அலப்பறை மன்னன் வடிவேலு :

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. தன்னுடைய உடல் மொழியினால் காமெடி செய்வது இவரின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் ஒரு era என்று இருக்கும். அப்படி கவுண்டமணி செந்தில் field out ஆன பிறகு வடிவேலு அந்த இடத்தை பிடித்துக் கொண்டார்.

மதுரை பாஷையில் இவர் செய்யும் அலப்பறைகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். காதலன் திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது காமெடி பயணம் தொடர்ந்து பல படங்களில் தனது தனித் திறமையை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான வின்னர், விரலுக்கேத்த வீக்கம், 23ம் புலிகேசி போன்ற படங்களை எப்பொழுது பார்த்தாலும் 100% சிரிப்பு உறுதி.

அது மட்டும் இல்லாமல் சுந்தர்.சி படங்கள் வடிவேலு என்ற காமெடி கலைஞனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. காமெடி நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பது வழக்கம். அப்படி வடிவேலுவும் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலி ராமன், எலி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இதில் 23ம் புலிகேசி திரைப்படத்தை evergreen காமெடி திரைப்படமாக இன்று மக்கள் கொண்டாடுகிறார்கள்.

தேர்தலில் சிக்கிய வடிவேலு :

சினிமாவில் உச்சம் தொட்ட பின்பு நடிகர்கள் அரசியல் வருவது என்பது தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை வழக்கமான ஒன்றாக உள்ளது. அதேபோல வடிவேலுவும் திமுகவிற்கு ஆதரவாக அரசியலில் களமிறங்கினார். 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி பேசி அவரை கொச்சைப்படுத்தினார். ஆனால் அந்த தேர்தலில் திமுக தோல்வியுற்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

அதோடு வடிவேலுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது. மேலும் வடிவேல் அவர் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுடன் சண்டை போடுவது என்று தன்னுடைய இமேஜை கெடுத்துக் கொண்டு வந்தார். அதனால் field out ஆனார். என்னதான் திரைப்படங்களின் வடிவேலும் நடிக்காமல் இருந்தாலும் meme template-கள் அவரின் நினைவுகள் மறக்க முடியாதது போல் செய்தது. இன்று வரைக்கும் நெட்டிசன்கள் இவரை வைத்து தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவதூறு பரப்புவோரை தூங்க விடக்கூடாது :

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுக்கு come back கொடுத்தது. தற்பொழுது வடிவேலு மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலு சினிமா விமர்சகர்களை தாக்கி கடுமையாக பேசியுள்ளார். அதில்,” காசு கொடுத்து படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள். 10 பேர் சேர்ந்து சினிமாவை அழித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அவதூறு பரப்புவோரை தூங்கவிடாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்”. என்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொது குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு ஆவேசமாக பேசியுள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.