500 ரூபாய் வச்சி ஒரு மட்டன் பிரியாணி தான் வாங்க முடியும்!.. கான் சிட்டி வடிவுக்கரசி கலகலப்பு பேச்சு!..

 
das

நாளை ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ள கான் சிட்டி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜே அஞ்சனா எழுப்பிய ஒரு கேள்விக்கு மூத்த நடிகை வடிவுக்கரசி அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய விஜே அஞ்சனா, "500 ரூபாய் கொடுத்து ஒரு வாரம் ஓட்டச் சொன்னால், உங்க டீம்ல யார் செய்வாங்க?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உடனடியாக பதிலளித்த வடிவுக்கரசி, "ஒரு வாரமா? ஒரு நாள் கூட ஓட்ட முடியாது. இப்போ ஒரு டீயே 20 ரூபாய். வெளியுலகத்தில் என்ன நடக்குது தெரியுமா தெரியாதா? ஒரு நாள் வேண்டும்னா எப்படியாவது சமாளிக்கலாம். ஆனால் ஒரு வாரம் எல்லாம் முடியவே முடியாது" என்று வெளிப்படையாக கூறினார்.

வடிவுக்கரசியின் இந்த யதார்த்தமான பதில், தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் சாதாரண மக்களின் பொருளாதார சிரமங்களை பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள கான்சிட்டி படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, ராதா ரவி, தம்பி ராமையா, விடிவி கணேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கான் சிட்டி திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வடிவுக்கரசியின் இந்த பேச்சு படத்தின் மீதான கவனத்தையும் அதிகரித்துள்ளது.

Tags

From Around the web