
Cinema News
அந்த டயலாக் பேச பயந்தேன்… ஆனா…? ரஜினிகாந்த செய்த செயலால் அழுத வடிவுக்கரசி..
Published on
By
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்தில் தனக்கு நிகழ்ந்த நெகிழ்ச்சியான தகவலை நடிகை வடிவுக்கரசி பகிர்ந்துள்ளார். அருணாச்சலம் 1997ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இப்படத்தினை சுந்தர் சி. இயக்கி இருக்கிறார். கிரேஸி மோகன் திரைக்கதை எழுதிய இப்படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா மற்றும் ரம்பா,வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர்.
1902 ஆம் ஆண்டு ஜார்ஜ் பார் மெக்கட்சியன் எழுதிய ப்ரூஸ்டர்ஸ் மில்லியன்ஸ் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்பட விமர்சகர்களிடமிருந்து மிகவும் பாராட்டுக்களை பெற்ற இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருது உட்பட மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது.
இப்படத்தில் ரஜினிகாந்தினை வடிவுக்கரசி திட்டும் ஒரு டயலாக் இருக்கும். அதை பேசவே முதலில் பயந்தாராம். 70வயது முதியவராக வடிவுக்கரசி கூன் விழுந்து அனாதை பயலே என ரஜினியை திட்ட வேண்டும். இதை கேட்ட வடிவுக்கரசிக்கு அதிர்ச்சியாகி விட்டதாம்.
vadivukarasai
இதனால் என் சினிமா கேரியரே நாசமாகும். அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை விமர்சித்த மனோரமாவை ரசிகர்கள் வசைப்பாடியதே ரொம்ப கொடுமையாக இருந்தது. இதுல என்னையும் இழுத்து விட பார்க்குறீங்களா? நான் பேச மாட்டேன் என்றாராம்.
ஆனால் படக்குழுவோ அதெல்லாம் பேசியாச்சு. வசனமும் ஓகேயாகி விட்டது என வடிவுகரசியிடம் கொடுத்து விட்டு சென்றனராம். அவரும் சரி என்ன செய்ய என நினைத்துக்கொண்டே அதை பேசி முடித்தாராம். 2500 மக்கள் முன்னிலையில் அந்த காட்சி முடிந்ததும் ரஜினிகாந்த் எழுந்து கை தட்டி இருக்கிறார். அவரை தொடர்ந்து மக்கள் எல்லாரும் கை தட்ட வடிவுக்கரசிக்கு அழுகையே வந்து விட்டதாம்.
vadivukarasi
வடிவுக்கரசி முதலில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்தார். அவரது குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அவர் வெவ்வேறு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார். அதன் மூலம் தான் சிகப்பு ரோஜாக்கள் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். நாயகியாக இவர் நடித்த முதல் படம் கன்னிப் பருவத்திலே. 2000களில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். வடிவுக்கரசி 350 திரைப்படங்களில் நடித்துள்ளார் மற்றும் 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...
Vijay TVK: கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய்...
கரூரில் நடந்த கோர சம்பவம் : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல்...
Karur: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை குறி...
Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்...