Goundamani: இப்போ நீங்க ரெண்டு தடவ தமிழ்நாடு கேட்டுச்சா?: கவுண்டமணி குறித்து பகிர்ந்த வடிவுக்கரசி

 
Goundamani: இப்போ நீங்க ரெண்டு தடவ தமிழ்நாடு கேட்டுச்சா?: கவுண்டமணி குறித்து பகிர்ந்த வடிவுக்கரசி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தனி இடம் கவுண்டமணிக்கு உண்டு.

கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணி. அவர் மேடை நாடகங்களில் நடிக்கும்போது சக நடிகர்கள் பேசும் வசனங்களுக்கு உடனுக்குடன் கவுண்டர் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. திரைத்துறையில் அவ்ர் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் அவ்ருக்கான அடையாளத்தை 16 வயதினிலே படம் கொடுத்தது. ரஜினிகாந்தின் உதவியாளராக நடித்த அவர் "மயிலு… ஒரு டீ சொல்லு" என்ற கதாபாத்திரம் இவரைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்துவந்தவருக்கு கரகாட்டகாரன் அவரை டாப் லெவலுக்கு கொண்டு சென்றது. அதன்பின் அவர் பல படங்களில் இரண்டாம் நாயகனாகவே பார்க்கப்பட்டார். உள்ளத்தை அளித்தா, மன்னன், மேட்டுக்குடி என பல படங்களை சொல்லலாம்.

Goundamani: இப்போ நீங்க ரெண்டு தடவ தமிழ்நாடு கேட்டுச்சா?: கவுண்டமணி குறித்து பகிர்ந்த வடிவுக்கரசி

பொதுவாகவே கவுண்டமணியுடன் நடிக்க பலர் அச்சப்படுவார்களாம். காரணம் ஏதாவது சொல்லி நக்கல் அடித்துவிடுவாராம். இந்த நிலையில் நடிகை வடிவுக்கரசி கவுண்டமணி குறித்து கூறுகையில், கவுண்டமணி சார் கூட நடிக்கும்போது கவனமாக நடிக்க வேண்டும். ஒரு தடவ ஒன் மோர் டேக் கேட்டால் , இப்போ நீங்க ரெண்டு தடவ நடிக்கலனு தமிழ்நாடு கேட்டுச்சா என்பார். யாராவது நல்லா இருக்கீங்களானு கேட்டால் இப்போ இல்லனா என்ன பன்ன போறீங்க என்பார். அவர் ரொம்ப நக்கல் பிடித்தவர். ஆனால் அவர் எவ்வளவு நக்கலடித்தாலும் யாரும் கோபபடமாட்டார்கள் என்று வடிவுக்கரசி கூறினார்.

From Around the web