×

கமல் அறிமுகப்படுத்திய இந்த நடிகையைத் தெரிகிறதா? பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கு கச்சேரி!

கமலின் ஹேராம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகையும் பாடகியுமான வசுந்தரா தாஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

கமலின் ஹேராம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகையும் பாடகியுமான வசுந்தரா தாஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஹேராம். அந்த படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் பாடகி வசுந்தரா தாஸ். அதன் பின் சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இவர் ஒரு பாடகியும் கூட. ஆனால் சிட்டிசன் படத்துக்குப் பிறகு அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்ல. ஆனால் தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பாடகியாக அவ்வப்போது சில பாடல்களை பாடி வந்தார். இதனால் தமிழ் ரசிகர்கள் அவரை மறந்தே போயிருப்பார்கள்.

இந்நிலையில் இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவரும் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒருவேளை அவர் கலந்திகொண்டால் பிக்பாஸ் வீடு இந்த முறை பாட்டும் கச்சேரியுமாக களைகட்டும் என ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News