சூரி, லோகேஷ் கனகராஜ் போல 100 கோடி கிளப்பில் இணைவாரா வைபவ்?.. ஐயப்பன் அருள் கிடைக்குமா?..
நடிகர் வைபவ் நடிக்கும் மணிகண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பக்தி மற்றும் ஆக்ஷன் கலந்த கதையுடன் உருவாகி வருகிறது.
முன்பு தத்துவமசி என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது மணிகண்டா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நீல நிற உடையில் வைபவ், அவருக்குப் பின்னால் ஐயப்பன் சிலை உள்ளது. இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு தயாரிக்கும் இப்படத்தில் பிரேம்ஜி இசையமைக்கவுள்ளார்.
மேலும் இப்படம் வரும் டிசம்பர் மாதத்தில் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. வைபவ் இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடித்து 100 கோடி வரை வசூல் ஈட்டிய மாளிகாபுரம் படத்தை இயக்கியவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
