×

இப்படியொரு படம் வெளியில் வரக்கூடாது... வைகோ காட்டம்...

சமந்தா நடித்திருக்கும் தி ஃபேமிலி மேன் 2 இந்தி தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம் எழுதியிருக்கிறார்.

 
family-man-2

சமந்தா நடித்திருக்கும் தி ஃபேமிலி மேன் 2 இந்தி தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம் எழுதியிருக்கிறார்.

சமந்தா, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 இந்தி தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. அந்த தொடரில் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று காண்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அன்புள்ள பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு வணக்கம்.

The Family Man 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் முன்னோட்டக்காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

தமிழர்களைப் பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.

ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ்ப் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக் காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக் காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

The Family Man 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News