Categories: Cinema News latest news throwback stories

மனைவியா? சினிமாவா? இக்கட்டான நிலையில் வைரமுத்து எடுத்த முடிவு!..

கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞர் என அறியப்படுபவர் வைரமுத்து. வைரமுத்து எழுதி தமிழில் வந்த பல பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இளையராஜா, பாரதி ராஜாவெல்லாம் சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்த பிறகுதான் வைரமுத்து சினிமாவிற்கே வந்தார்.

பள்ளி காலங்களிலேயே கவிதை எழுதுதல் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார் வைரமுத்து. எனவே எப்படியாவது சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அதற்குள்ளாக அவருக்கு திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் மிகவும் சிரமத்துடனே தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார் வைரமுத்து. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த வைரமுத்துவின் மனைவிக்கு ஒரு நாள் வலி வந்தது. எனவே அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினார்.

வைரமுத்துவிற்கு வந்த நெருக்கடி:

அந்த சமயத்தில் வந்த ஒரு ஆள் வந்து இயக்குனர் பாரதிராஜா உங்களை அழைத்து வருமாறு கூறினார் என்றார். இவ்வளவு நாள் சினிமாவில் வைரமுத்துவிற்கு வராத வாய்ப்பு, அவரது மனைவி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது வந்தது.

எனவே மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வேகமாக பாரதிராஜாவை போய் சந்தித்தார் வைரமுத்து. அங்கு இளையராஜாவும் இருந்தார். அவரை அலட்சியமாக பார்த்த இளையராஜா பாடல் இசையை போட்டு காட்டி  நாளைக்குள் இதற்கு நல்ல பாடல் வரிகளை எழுதி கொடுங்கள் என கூறினார்.

அதற்கு வைரமுத்து “எனக்கு இப்போதே ஒரு பாடல் வரி தோன்றுகிறது, பாடி காட்டவா? என கேட்டுள்ளார். அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்துள்ளது. சரி பாடி காட்டு என கூறியுள்ளனர். உடனே வைரமுத்து இது ஒரு பொன்மாலை பொழுது என அந்த பாடலை பாடினார்.

அந்த வரிகள் அவர்கள் அனைவருக்குமே பிடித்து போய்விட்டது. இப்படியாகதான் தனது திரைப்பயணத்தை துவங்கினார் வைரமுத்து. ஒரு பேட்டியில் இதை அவர் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: இளையராஜாவின் முதல் படம் ‘அன்னக்கிளி’ சந்தித்த பிரச்சனை!.. ஒரு வாரத்தில் நிகழ்ந்த மேஜிக்..

Published by
Rajkumar