Rajini 173: யாரும் கள்ளச் சந்தோஷப்பட வேண்டாம்.. போற போக்குல ‘ரஜினி 173’ல் கொளுத்திவிட்டு போன வைரமுத்து
நடக்கும்னு எதிர்பார்த்த ஒன்னு நடக்காமல் போனால் எது எப்படிப்பட்ட ஏமாற்றமாக இருக்கும் என அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் சுந்தர் சி ரஜினி காம்போவில் ரஜினி 173 படம் தயாராக போகிறது. அதை கமல் தயாரிக்க போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இப்போது சுக்கு நூறாகியிருக்கிறது. இதில் சுந்தர் சி செய்த தவறு என்னவெனில் அவசர அவசரமாக முடிவெடுத்துவிட்டார் என்பதுதான். அவர்களுக்குள் என்ன வேணுனாலும் நடந்திருக்கலாம்.
ஆனால் அவர் எடுத்த முடிவை தயாரிப்பு தரப்பிலும் அதில் நடிக்க இருந்த ரஜினியிடமும் ஆலோசித்த பிறகு அறிவித்திருக்கலாம். ஆனால் சுந்தர் சி கமல் ரஜினி இருவருக்கும் தெரியாமலேயே அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது கமலுக்கும் ரஜினிக்கும் அவமானம் என அவர்களுடைய ரசிகர்கள் சுந்தர் சியை பொளந்து கட்டி வருகின்றனர். இதில் குஷ்புவும் ரசிகர்களிடம் மல்லுக்கு நிற்கிறார்.
ரசிகர்கள் போடும் கமெண்டுக்கு கண்டுகொள்ளாமல் போவதை விட அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். அந்த ரசிகர்களும் குஷ்பூ நம்முடன் சண்டை போடுகிறார் என்று நினைத்து நாளுக்கு நாள் அவர்களின் அராஜகத்தையும் அதிகப்படுத்தி வருகின்றனர். இது சுந்தர் சிக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. ஆனால் அவருக்கு தெரிந்தால் வருத்தப்படத்தான் செய்வார்.
இதில் வைரமுத்து ரஜினி 173 படம் நின்று போனதை தன்னுடைய கவிதை நடையில் கூறியிருந்தார். அதாவது இயக்குனர் சுந்தர் சி விலகியது விபத்து அல்ல, அது ஒரு திருப்பம். அதில் யாரும் கள்ளச் சந்தோஷம் அடைய வேண்டாம் என கூறியிருக்கிறார். இதில்தான் நமக்கு சந்தேகமே வருகிறது. அவர் சொல்வதை போல யார் இங்கு கள்ள சந்தோஷம் அடைகிறார். ஒன்னு கமல் ஒரு உயரத்திற்கு போனால் ரஜினி அப்படி நினைக்கலாம். இல்லை. ரஜினி ஒரு உயரத்திற்கு போனால் கமல் அப்படி நினைக்கலாம். இப்படி நடந்திருக்கிறது.
ஆனால் இந்த படமே கமல் தயாரிக்க ரஜினி நடிக்கிறார். இதில் கள்ள சந்தோஷம் யார் அடைகிறார்? அதை அவர் தெளிவுபடுத்தினால் நல்லா இருக்கும். கமலையும் ரஜினியையும் எதிரியாக நினைக்க இங்கு யாருமே கிடையாது. அப்படி இருக்கும் போது ஏன் வைரமுத்து அவ்வாறு குறிப்பிட்டார். இன்னொரு விஷயம் என்னவெனில் இந்தப் படத்திற்குள் தனுஷ் பெயரும் அடிபட்டு வருகிறது.

ஏற்கனவே பவர் பாண்டி படத்தை ரஜினியை வைத்து எடுக்கத்தான் தனுஷ் விரும்பினார். அவர் மிகவும் poeticஆ-த்தான் படத்தை எடுப்பார். ஆனால் ரஜினி காமெடியான படம் வேண்டும் என கூறுகிறார். எல்லாவற்றையும் தாண்டி குடும்ப பிரச்சினை வேறு இருக்கிறது. அப்படி இருக்கும் போது தனுஷ் பெயர் எப்படி வருகிறது என தெரியவில்லை. யூகம் இருக்க வேண்டியதுதான். அதுக்காக எதிர்பார்க்க முடியாத அளவில் யூகம் இருக்கக் கூடாது என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.
