Connect with us

latest news

இந்த பாட்டுக்கு வரிகள் எழுதுறது கஷ்டம் ரஜினி..-வைரமுத்துவுக்கே டஃப் கொடுத்த ரஜினி பட பாட்டு..!

தமிழில் 100க்கும் அதிகமான படங்களில் பாடல் வரிகள் எழுதி கொடுத்தவர் கவிஞர் வைரமுத்து. இது மட்டுமின்றி தொடர்ந்து கவிதைகள், நாவல்கள் போன்றவையும் எழுதி வருகிறார். தமிழில் முதன் முதலாக நிழல்கள் என்கிற திரைப்படம் மூலமாக வைரமுத்து அறிமுகமானார்.

கவிஞர் கண்ணதாசன்,வாலி வரிசையில் அவர்களுக்கு அடுத்து இருப்பவர் வைரமுத்து. தமிழில் எவ்வளவோ பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். ஆனால் அவருக்கே கடினம் கொடுத்த சில பாடல்களும் தமிழ் சினிமாவில் உண்டு.

vairamuthu

அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்தார். அதன் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்துதான் வரிகள் எழுதினார். அப்போது ஒரு பாடலுக்காக மெட்டமைத்த தேவா அதை வைரமுத்துவிடம் இசைத்து காட்டினார். ட்யூன் நல்லா இருக்கு. ஆனா பல்லவியோட பின்பகுதி ரொம்ப வேகமா இருக்கு. அதுக்கு பொருத்தமான வார்த்தைகள் எழுதுறது கஷ்டம் எனக் கூறிவிட்டார் வைரமுத்து.

இதை கேட்டதும் தேவாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. என்ன வைரமுத்துவே இப்படி கூறுகிறாரே? என அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் அங்கு ரஜினிகாந்தும் இருந்தார். அவர் வைரமுத்துவிடம் வந்து “சார் நீங்க இதை விட கஷ்டமான பாட்டுக்கு எல்லாம் வரிகள் எழுதி இருக்கீங்களே சார், உங்களால முடியும் என கூறினார்.

annamalai

பிறகு வைரமுத்துவும் கூட பாடல் வரிகளை யோசித்து எழுதினார். ஒரு வெண்புறா என்கிற அந்த பாடல் வரிகளை படித்ததுமே ரஜினிக்கு பிடித்துவிட்டது. இதை விட சிறப்பாக இந்த பாடலுக்கு வரிகள் எழுத முடியாது என கூறி வைரமுத்துவை பாராட்டியுள்ளார் ரஜினி.

author avatar
Rajkumar
Continue Reading

More in latest news

To Top