இறப்பதற்கு முன்பு தன் சுயசரிதை நூலை எழுதி முடித்த கே.பாக்யராஜ்... அதுக்கு முன்னுரை எழுதிக் கொடுத்த வைரமுத்து!

 
K bhagyaraj vairamuthu

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி உச்சம் தொட்டவர் தான் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ். பல கஷ்டங்களை கடந்து தான் இவர் சாதித்து காட்டினார்.

'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்பட்டு வந்த கே.பாக்யராஜ் எழுதிய 'வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்' என்ற புத்தகம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உதவி இயக்குநர்களுக்கு பாடம் போல் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது.

பாக்யராஜ் கடந்த ஜூன் 27 அன்று காலமானார். தற்போது, அவர் கடைசியாக தனது சுயசரிதை நூலை எழுதி முடித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல பாடலாசிரியர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் "17.06.2026 அன்று 'படிச்சாப் புடிச்சிர்லாம்’ என்ற தன் சுயசரிதை நூலை எனக்குத் தந்தனுப்பி 'முன்னுரை எழுதிக்கொடுங்கள்' என்று பாசத்தோடு கேட்டார் பாக்யராஜ்.

‘கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என்றேன். ‘சரி’ என்றார். 27.06.2026 அன்று அவர் மறைவுற்றார் என்றசெய்தி என்னை நிலைகுலைய வைத்தது. அதன்பிறகு நூலைப் படிக்கப் படிக்க அவர்பட்ட துயரங்களும், ரணங்களும் அவமானங்களும், வறுமையும் என்னை வாட்டி எடுத்தன. உணர்ச்சியுள்ள ஒரு முன்னுரை எழுதி முடித்தேன்

பிறிதொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால் முன்னுரையை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன். ஆனால், இந்தச் சூழ்நிலையில் நேரில் சென்று அவர் மனைவியிடம் ஒப்படைப்பதே மரியாதை என்று நினைத்தேன். நேற்று மாலை அவர் இல்லம் சென்று திருமதி.பூர்ணிமாவிடம் முன்னுரையை வழங்கினேன், தம்பி சாந்தனு உடனிருந்தார். எவர் வெளியிட்டாலும் உடனே வெளியிடுங்கள், உயிர்த்துடிப்புள்ள புத்தகம் இது" என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web