Kanguva: சூர்யாதான் காரணம்!. சிவா லைவ் காலி!.. செகண்ட் பார்ட் வாய்ப்பே இல்ல!.. சீறும் பிரபலம்!..
Nov 15, 2024, 14:32 IST
Kanguva: சூர்யாவின் நடிப்பில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம்தான் கங்குவா. இந்த படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 2 வருடங்களுக்கும் மேல் சூர்யா ரசிகர்கள் காத்திருந்தார்கள். சிறுத்தை சிவா முதன் முறையாக ஒரு ஹிஸ்டாரிக்கல் படத்தை இயக்கியிருக்க, சூர்யாவின் கெட்டப்பையும், டீசர், டிரெய்லரையும் பார்த்துவிட்டு கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படம் என ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், படம் பார்த்த பின் அந்த ஆர்வமெல்லாம் சுக்கு நூறாகிவிட்டது. இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தில் சூர்யா வாங்கிய சொற்ப சம்பளம்… எஸ்கேவிடம் தோற்ற பரிதாபம்… ரசிகர்களை ஒரு படத்தோடு பயணிக்க வைப்பது கதைதான். அது படத்தில் இல்லை என்பதால் ரசிகர்களால் எந்த காட்சியிலும் ஒன்ற முடியவில்லை. பல காட்சிகளில் பேசும் வசனங்கள் புரியவில்லை. ஒருபக்கம், பின்னணி இசை என்கிற பெயரில் படம் முழுக்க ஒரே சப்தம் என படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலே மிஞ்சியிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் கங்குவா படம் பற்றி சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேசியதாவது: இந்த தவறுக்கு சூர்யா முதல் பொறுப்பேற்க வேண்டும். இந்த கதையில் நடிக்க சம்மதம் சொன்னவர் அவர்தான். அடுத்து தவறு சிவா மீது. சூர்யாவின் நடிப்பு, சிறந்த ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், சண்டை பயிற்சி இயக்குனர் என மற்றவர்களை நம்பி படமெடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் இவ்வளவு பணம் போட்டிருக்கிறார். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என அவர் யோசிக்கவில்லை.
#image_title ஞானவேல் ராஜாவை குறை சொல்ல முடியாது. சூர்யாவையும், சிவாவையும் நம்பி பணம் கொடுத்திருக்கிறார். சூர்யா இரண்டு வெற்றி படங்களை கொடுத்து இமேஜை காப்பாற்றிக் கொள்வார். சிவா வெப் சீரியஸ் இயக்க போய்விடுவார். ஞானவேல் ராஜாதான் மாட்டிக்கொள்வர். கங்குவா படத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க 10 வருடங்கள் ஆகும். கண்டிப்பாக சூர்யா அவருக்கு சம்பளம் வாங்காமல் 2 படங்களில் நடித்து கொடுக்க வேண்டும். ஞானவேல் ராஜா அவரை விடமாட்டார். கங்குவா இரண்டாம் பாகம் வர வாய்ப்பே இல்லை. சூர்யாவின் சம்பளம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. வீரம், விஸ்வாசம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சிவா கங்குவா படத்தில் கதையை சரியாக அமைக்கவில்லை’ என சொல்லி இருக்கிறார். இதையும் படிங்க: Kanguva: ஞானவேல் ராஜா எப்படி ஏமாந்தார்? சிம்பு, ஷங்கர் படங்கள் இனி அவ்ளோதானா?