ஒரே வரியில் யோகிபாபுவை டேமேஜ் செய்த பிரபலம்

 
ஒரே வரியில் யோகிபாபுவை டேமேஜ் செய்த பிரபலம்

யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கெணத்த காணோம். மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட யோகிபாபு பேசியபோது, இந்தப் படத்தை எனக்கு கொடுத்த என்னுடைய அருமைத் தம்பி சுரேஷ் சங்கையாவுக்கு நன்றி. இந்தப் படத்தை எடுத்துவிட்டு சுரேஷ் சங்கையா மறைந்துவிட்டான். எல்லோரும் ஆசைப்பட்டதுபோல இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரே வரியில் யோகிபாபுவை டேமேஜ் செய்த பிரபலம்

இயக்குநர் இல்லாமல் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என கூடவே இருந்து பார்த்திருக்கிறேன். இப்போதுகூட அடுத்து இன்னொரு பட ஷூட்டிங் எனக்கு இருக்கிறது. ஒரு அரைமணிநேரம் எல்லோரையும் பார்த்துவிட்டு வருகிறேன், இல்லை என்றால் தப்பாகிவிடும் எனச் சொல்லிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். நம் மக்களின் பிரச்னைகளை என் மூலமாகச் சொல்ல வேண்டும் என ஆசைப்படுபவர்கள் கதையை எடுத்து வாருங்கள். சத்தியமாக நான் செய்கிறேன் என்று கூறினார்.

ஒரே வரியில் யோகிபாபுவை டேமேஜ் செய்த பிரபலம்

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் வலைபேச்சு பிஸ்மி ஒரு வரியில் யோகிபாபுவின் பேச்சை ஷேர் செய்து டேமேஜ் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் யோகிபாபுவின் பேச்சை போட்டு உலகமகா நடிப்புடா சாமி என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web