
Cinema News
விஜய் இயக்குனர்கள் தான் டார்கெட்.. ஆக்சன் ஹீரோ இமேஜுக்கு SK போடும் பக்கா பிளான்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி அதன் பிறகு ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக காமெடி அலப்பறை செய்து வெகுஜன மக்களின் விருப்பத்திற்குரிய நபராக மாறினார். இதனால் இவருக்கு வெள்ளி திரையில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தக் கொண்ட சிவகார்த்திகேயன் இன்று டாப் 5 தமிழ் நடிகர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளார். அதற்கு காரணம் அமரன் எனும் பிரம்மாண்ட வெற்றி பெறந்தான். கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். அன்றிலிருந்து திடீர் தளபதி ஒரு நாள் தளபதி என்று இவருக்கு பட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
அதற்கு அடுத்த படமாக ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மதராஸி படம் உருவானது. படம் வெளியாகி தற்போது வரை பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகிறது. இருப்பினும் இன்னும் சில தினங்களுக்கு பிறகு தான் படத்தின் நிலைமை தெரிய வரும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த நகர்வுகளை வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார் அதில்

”சிவகார்த்திகேயன் ஆக்சன் ஹீரோவாக உருவாக வேண்டும் என்றால் முன்னணி இயக்குனர்களுடன் வேலை செய்ய வேண்டும். அதற்காக தற்போது ஏ ஆர் முருகதாஸை அழைத்துள்ளார். மேலும் அட்லீ, லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களுக்கு துண்டை போட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை. ஒரு ஹீரோ என்றால் வளர்ச்சிக்கான பாதையில் தான் பயணிக்க வேண்டும் அப்படி இருக்கையில் அவரின் முடிவு சரியானதுதான்”.
”முருகதாஸுக்கு தொடர் தோல்வி. பாலிவுட்டிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை, தமிழிலும் அவரின் இயக்கத்தில் யாரும் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் முருகதாஸ் அழைத்து மதராஸி படம் கொடுத்தது, மூத்த இயக்குனரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு அவரிடம் இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுவரை சிவகார்த்திகேயன் பண்ணாத ஜானரில் இந்த படத்தை எடுத்துள்ளார்”.
”ஒரு காலத்தில் ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேக் ஸ்டேஜில் பணியாற்றி கொண்டிருந்த சிவகார்த்திகேயன், இன்றைக்கு அந்த இயக்குனரிடம் ஹீரோவாக வேலை பார்ப்பது என்பது எங்கேயுமே நடக்காது. ஒரே இரவில் வாழ்க்கை மாறும் என்றால் அது சினிமாவில் தான் நடக்கும். நான் அனைத்து நேர்காணலும் சொல்வது என்னவென்றால் சிவக்கார்த்திகேயன் மாதிரி விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்கிறவர்கள் கண்டிப்பாக அவர்கள் சிகரத்தை அடைவார்கள்”.
”ஒரு தயாரிப்பாளர் படம் ரிலீஸ் சமயத்தில் உண்மையிலே பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார் என்றால் அதற்கு சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கான பணத்தை வாங்கி அதில் போட்டு படத்தை ரிலீஸ் செய்கிறார். இதை பெரும்பாலான ஹீரோக்கள் இங்கு பண்றது இல்லை. இதெல்லாம் சேர்த்து தான் அவரின் வளர்ச்சி இருக்கிறது”. என்று கூறியுள்ளார்