Connect with us
vijay

Cinema News

வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜய்.. ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தன்னுடைய தனித் திறமையால் சினிமாவில் உச்சம் தொட்ட விஜய் தற்போது அரசியலிலும் குதித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இனிமேல் நம்ம தளபதி திரைப்படங்களில் நடிக்க மாட்டாரா? என்று ஏக்கத்தில் உள்ளனர்.

சினிமா பிரபலங்களும் விஜய் சினிமா விட்டு போவதை விரும்பவில்லை காரணம் இன்று தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் இவரால் பல நூறு கோடி பிசினஸ் இருக்கிறது. படம் நடிப்பதை நிறுத்திவிட்டால் அதற்கான வருவாய் கண்டிப்பாக அடிபடும். இதனால் விஜய் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் தான் தெரிய வரும்.

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தனது அரசியல் வருகையை பகிரங்கமாக அறிவித்த விஜய் மற்ற கட்சிகளை பெரிதும் விமர்சிக்காமல் மாநாட்டில் பேசினார். இவரின் பேச்சு ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அரசியல் விமர்சனங்களுக்கு என்ன இவ்வளவு பயத்தோடு விஜய் பேசுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உணர்ச்சியில் கொந்தளித்து பேசி உள்ளார். அதிலும் கட்ச தீவை மீட்டெடுக்க வேண்டும். என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இதனால் விஜய்க்கு அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் அவரின் படங்கள் வெளியாகும் இலங்கையிலும் பிரச்சனை ஏற்படும். 2026 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று விஜயின் கடைசி திரைப்படமான ”ஜனநாயகன்” வெளியாக இருக்கிறது.


இந்நிலையில் விஜய் இப்படி பேசி இருப்பது அவரின் படத்திற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ”இலங்கையில் படப்பிடிப்புகள் அதிகமாக நடைபெறுகிறது. அது மட்டும் இல்லாமல் பணக்காரர்கள் விளையாடும் கேம்லிங் ஆட்டமும் அங்கு நடைபெறும். இந்த மாதிரியான தேவைகளுக்காக நம்மூரில் இருந்து இலங்கைக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும்”.

”ஆனால் விஜய் கட்ச தீவை மீட்டெடுக்க மீண்டும் என்று பேசியதில் அங்குள்ள சிங்களர்கள் கோபமடைந்து இதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். விஜய் உருவப்படத்தை எரிப்பது, அவர் கட்சி கொடியை எரிப்பது என்று ஆக்ரோஷமாக செயல்பட்டதாக இணையத்தில் வந்தது. விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது”.

”இது தொடர்பாக சென்னைக்கு வந்த இலங்கை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ’இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது தான்’ என்று நெத்தியடியாக அடித்து விட்டார். இது விஜய்க்கு சொல்லப்பட்ட பதிலாக பார்க்கலாம். இந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் விஜய் பேசினார் என்றால் இங்கிருந்து படப்பிடிப்புக்கு செல்லக்கூடிய நம்ம ஊரு நடிகர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். நடக்காத விஷயத்தை விஜய் பேசுவதை நிறுத்தினால் அது அவருக்கும் நல்லது மற்ற எல்லோருக்கும் ரொம்ப நல்லது”. என்று கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top