1. Home
  2. Latest News

நீஙக சொல்லும் போதுதான் சந்தேகமே வருது.. அஜித்தை மடக்கிய அந்தணன்

anthanan
அஜித்தை தமிழன் இல்லை என்று அந்தணன் பேசியிருக்கிறார். அது இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


அவர் பேசுனது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என அஜித் நினைத்திருக்கிறார். ஆனால் அதை அவர் தமிழில் பேட்டி கொடுத்திருந்தால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்காது. அப்போ மொழிதான் பிரச்சினையா எனக் கேட்கும் போது ஆமாம், நிச்சயமாக என அந்தணன் கூறியுள்ளார். இங்கு தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும்னு சொல்லமுடியாது. 

அப்போ எல்லாருக்கும் ஒரு தகவலை கொண்டு செல்லும் போது நமக்கு பிடித்த மொழியில் பேசிவிட முடியாது. தமிழர்களுக்குத்தானே நீங்கள் தகவல் சொல்லணும். அப்போ தமிழ் நிருபருக்கு பேட்டி கொடுக்கணும் அல்லது தமிழில் சிறந்த ஊடகம் எதுனு தேர்வு செய்து அதற்கு பேட்டி  கொடுக்கணும். அதாவது இதை சொல்ல நினைக்கிறார் என்றால் பேட்டி கொடுக்கணும். சொல்றதும் சொல்லாததும் அவர் உரிமை.

பேசணும்னு நினைச்சவரு ஆங்கில ஊடகத்தில் பேசிவிட்டார். இங்க என்ன நடந்துச்சு? வேற மாதிரி திரும்பிடுச்சு. அஜித்துக்கும் விஜய்க்கும் இடையில் சண்டை மூட்டிவிட ப்ளான் பண்ணிவிட்டார்கள். அதை அஜித் விரும்பவில்லை. குறிப்பாக சாட்டை முருகன் போன்றவர்கள் எல்லாம் உனக்குத்தாண்டா அஜித் சொல்லியிருக்கிறார்னு விஜயை ஃபைர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

இது அஜித்துக்கு ஷாக் ஆயிடுச்சு. நம்மளை வைத்து பயங்கரமா அரசியல் பண்ணிக்கொண்டிருக்கிறார்களே என நினைத்து உடனே ஒரு பேட்டி கொடுக்கிறார். அதையும் ஆங்கிலத்திலேயே கொடுக்கிறார். அது ரெங்கராஜ் பாண்டே மூலமாக வெளியில் வருகிறது. அஜித் என்ன சொல்கிறார் என்றால், எனக்கும் விஜய்க்கும் சண்டையை மூட்ட பார்க்கிறார்கள். என்றைக்கும் நான் விஜய்க்கு நல்லதையேதான் நினைப்பேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் ரெங்கராஜ் பாண்டே இதை வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறதுக்கு கூட வாய்ப்பிருக்கிறது. இந்த இடத்தில் அஜித் கிளவராக ஒரு வேலை செய்திருக்கிறார். தான் பேசிய ஆடியோவை அப்படியே சுரேஷ் சந்திராவை விட்டு ரீ போஸ்ட் செய்ய வைத்திருக்கிறார்.அப்போ இது அஜித் பேசியதுதான் என புரிந்து கொள்வார்கள். விஜய்க்கு ஆதரவான மன நிலையை எடுத்திருக்கிறார் என நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதை 10 வருடத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் இவ்ளோ அடிதடி எல்லாம் உருவாகியிருக்காது. இரு தரப்பு ரசிகர்களும் சோசியல் மீடியாக்களில் பேசியதை காது கொடுத்து கேட்க முடியவில்லை. காலம் போன காலத்துல சொல்லி இப்பொழுது என்ன பயன்? இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார். தமிழன் இல்லை என்ற குற்றச்சாட்டை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ajithvijay

உண்மையிலேயே அவர் தமிழன் இல்லைதான். தமிழ் நாட்டில் பிறந்த எல்லாரும் தமிழன் இல்லை. இந்த விஷயத்தில் சீமான் சொல்வதை நாம் கேட்போம். எல்லாரையும் வாழவைப்பது தமிழ் நாடு. இன்று டாப்பில் இருப்பவர்கள் எல்லாரும் தமிழ் இல்லை. ரஜினி என்ன தமிழனா? இருந்தாலும் அவரை நாம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். இல்ல, நீங்க தமிழன் இல்லை என ஒதுக்கி வைக்கிறோமா? 

நீங்க ஏன் இந்த பிராண்டை தூக்கிக் கொண்டு வருகிறீர்கள். நான் தமிழன் என்று மாறி  மாறி சொல்லும் போதுதான் சந்தேகமே வருகிறது. ஆனாலும் நான் நிரூபிப்பேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களால் முடியாது. ஏனெனில் நீங்க தமிழன் இல்லை என அந்தணன் கூறியுள்ளார். 


 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.