ஷங்கர்னா 500 கோடி.. இதென்னா கவர்மெண்ட் G.O வா? சரியான புத்திமதி கூறிய பிரபலம்
பிரம்மாண்ட இயக்குனர்: தன்னால் பிரம்மாண்டமும் கொடுக்க முடியும், நண்பன் போன்ற படங்களையும் கொடுக்க முடியும் என நிரூபித்தவர் தான் இயக்குனர் ஷங்கர். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்தப் படத்தைப் பற்றி பல பேட்டிகளில் அவருடைய அனுபவங்களையும் அந்த படத்தைப் பற்றியும் பல்வேறு வகையான செய்திகளை கூறி வருகிறார் ஷங்கர்.
ரசிகர்களின் கேள்வி: அதில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் சமீபத்தில் ரப்பர் பந்து படம் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. தினேஷை வைத்து படம் பண்ணனும்னு ஆசை இருக்கிறது என கூறியிருந்தார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இப்படி ஆசை இருக்கும் ஷங்கரால் ஏன் இறங்கி வந்து நண்பன் போன்ற கதையை எடுக்க முடியவில்லை என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
முதலில் மாற வேண்டும்: இதற்கு வலை பேச்சு அந்தணன் அவருடைய பதிலை கூறி இருக்கிறார். இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் பா ரஞ்சித்தை நாம் மிகவும் பாராட்ட வேண்டும். ஏனெனில் சார்பட்டா பரம்பரை போன்ற பெரிய அளவில் படத்தை எடுத்து விடுவார், அப்படியே நட்சத்திரம் நகர்கிறது போன்ற இன்னொரு படத்தையும் எடுத்து விடுவார். அதனால் ஒரு இயக்குனரை நாம் கணிக்கவே கூடாது. இவர் கிட்ட போனால் நூறு கோடி இருந்தால் தான் படம் எடுப்பார் என்ற எண்ணத்தை நீங்கள் மக்களிடையே காட்டவே கூடாது.
அடைமொழி எதற்கு?: இவர் கதைக்காக படம் பண்ணுவார். 5 கோடியில் படம் எடுக்க முடியுமா? ஐந்து கோடியில் தான் எடுப்பார். இந்த படம் 500 கோடியில் எடுக்கணுமா 500 கோடியில் எடுப்பார். இப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் ஹேண்டில் பண்ணக்கூடிய இயக்குனராக இருக்க வேண்டும். இரண்டிலுமே வெற்றி படமாக கொடுக்க முடியும் என்ற இடத்திற்கு முதலில் ஒரு இயக்குனர் வரவேண்டும். முதலில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடைமொழியை தூக்கி எறிய வேண்டும்.
ஏனெனில் அப்படியே சொல்லி சொல்லியே ஷங்கரை கெடுத்து வைத்திருக்கிறார்கள். முதலில் நல்ல இயக்குனர் என்ற பெயரை வாங்குங்க. ஷங்கர் சொன்னதைப் போல ரப்பர் பந்து படம் தனக்கு பிடித்திருக்கிறது. தினேஷை வைத்து படம் பண்ண வேண்டும் என சொன்னார். ஏன் அந்த மாதிரி ஒரு படத்தை பண்ணக்கூடாது ஷங்கர்? ஏன் சங்கர் என்றால் 500 கோடியில் தான் படம் பண்ண வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறதா?
அப்படி இல்லை. 5 கோடியில் படம் பண்ணுங்க, 15 கோடியில் படம் பண்ணுங்க, 20 கோடியில் படம் பண்ணுங்க. மக்கள் என்ன வரமாட்டேனா சொல்கிறார்கள் .உங்க பேருக்கு தானே அந்த கவர்ச்சி. ஷங்கர் படம்டா போவோம் என்று தானே உள்ளே வருகிறார்கள். அப்போ இப்படி தான் காட்ட வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறதா ? அதனால் ஷங்கரும் மாற வேண்டும். வெறும் பேட்டிகளில் மட்டும் பேசிவிட்டு போகக்கூடாது. மாற வேண்டும் என வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.