அந்தப் படத்துல நயன் செஞ்ச டார்ச்சர்.. இவங்க இத பேசலாமா? தொடரும் பனிப்போர்
நயன்தாரா:
நயன்தாரா மற்றும் வலைப்பேச்சு சேனலுக்கு இடையில்தான் கடுமையான பனிப்போர் நடந்து வருகிறது. 50 எபிசோடில் 45 எபிசோட் என்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று சொன்னதிலிருந்தே வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன் நயன்தாரா செய்த அட்டகாசம், டார்ச்சர் என ஒவ்வொன்றாக வீடியோவில் பேசி வருகிறார்கள்.
அதில் சமீபத்தில் வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது , நயன்தாராவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பார்த்தோம் என்றால் அதில் ஒரு கருத்து வெளிப்படும். இப்படி ஒரு கெட்டவன் இந்த உலகத்திலேயே கிடையாது என்பதுதான். பிரச்சனை என்னவெனில் தன்னுடைய கல்யாணத்தையே ஒரு வியாபாரமாக மாற்றிய நடிகை தான் நயன்தாரா. கிட்டத்தட்ட 18 கோடிக்கு தன்னுடைய கல்யாணத்தை விற்று அதையே பணமாக்குகிற ஒரு சாதுர்யம், சாமர்த்தியம் நயன்தாராவிற்கு மட்டும்தான் இருக்கிறது.
உங்களுக்கு தகுதி இருக்கா?
நயன்தாரா அவ்வளவு நல்லவங்களா ?மற்றவர்களை குறை சொல்கிறார்களே. எவ்வளவு டேமேஜ் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணுகிறார் .நீ மனுசனே கிடையாது என்பது தான் அவர் சொல்ல வருவது. நயன்தாரா நியாயமான இடத்தில் இருந்து கொண்டு அதை சொல்ல வேண்டும். உங்களால் எவ்வளவு பேருக்கு இங்கு பாதிப்பு. நீங்க எவ்வளவு பேருக்கு இணக்கமாக இருந்துள்ளீர்கள்?
உதாரணமாக O2 என்ற திரைப்படம். ஒரு பஸ் மலைப்பிரதேசத்தில் கவிழ்ந்து விடும். அது மேல் மண் மூடிவிட கிட்டத்தட்ட பஸ் புதைந்த மாதிரி அங்கு சூழல் உருவாகும். அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடியும். ஆனால் அந்த படத்தை பார்க்கும் பொழுது அந்த ஒரு சூழலில் நயன்தாராவை தவிர அந்த பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் அழுக்காக இருப்பார்கள்.
டார்ச்சர் செய்த நயன்:
அந்த காட்சியை படமாக்கும் பொழுது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் அழுக்கை தடவி கொள்ளுங்கள் என்று சொன்னால் அந்த அளவுக்கு டென்ஷன் ஆனாராம் நயன்தாரா. அந்த படத்தின் படப்பிடிப்பை அந்த இயக்குனர் நினைத்த மாதிரி எடுக்கவே இல்லையாம். அவ்வளவு டார்ச்சர் செய்திருக்கிறார் நயன்தாரா. ஒரு படைப்பாளிக்கே எல்லா உரிமைகள் இருந்தும் இவர் செஞ்ச வேலையால் அந்த இயக்குனரால் அந்த படத்தை சரிவர எடுக்க முடியாமல் போனது தான் மிச்சம் .அனைத்து தயாரிப்பாளர்களின் வயித்தெறிச்சலையும் வாங்கிக் கொள்கிறார் நயன்தாரா என அந்தணன் கூறினார்.