‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு’! நயனை மனசார வாழ்த்திய அந்தணன்.. ஏன்னு தெரியுமா?
நயன்தாரா:
தென்னிந்தியா சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நேற்று ஒரு ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவருடைய வாழ்க்கையில் அவர் சந்தித்த போராட்டங்கள் கஷ்டங்கள் கடந்து வந்த பாதைகள் என ஒவ்வொன்றாக கூறி வந்தார்.
இதில் தன்மீது பாயும் விமர்சனம் பற்றியும் அவர் பல கருத்துக்களை பகிர்ந்தார். அதிலும் குறிப்பாக youtube இல் பிரபல சேனல்களில் ஒன்றான வலைப்பேச்சு சேனலை சினிமா துறையைச் சேர்ந்த பிஸ்மி, அந்தணன், சக்தி ஆகிய மூன்று பேரும் நடத்தி வருகிறார்கள். அவர்கள் பெயரையோ அவர்களுடைய சேனலை பற்றியோ வெளிப்படையாக கூறாமல் ஒரு மூன்று பேர் இருக்கிறார்கள்.
நயன் கோபம்:
என்னை வைத்து தான் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். 50 எபிசோடு இருக்கிறது என்றால் அதில் 45 எபிசோடு என்னைப்பற்றி தான் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் நிறைய வியூவ்ஸ் கிடைக்கிறது. நிறைய பணம் கிடைக்கிறது என்றெல்லாம் இவர்களைப் பற்றி நயன்தாரா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதோடு மட்டும் இல்லாமல் கெட்டதை பார்க்காதே கெட்டதை பேசாதே கெட்டதை கேட்காதே என்பதை விளக்கும் வகையில் மூன்று குரங்குகள் உட்கார்ந்திருக்கும் சிலையை நாம் பார்த்திருப்போம் .அதை இவர்களுடன் ஒப்பிட்டு ஆனால் அந்த குரங்குகளுக்கு எதிரானவர்கள் இவர்கள் என கெட்டதை மட்டும் தான் பேசுகிறார்கள் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தார்.
சிரிப்புதான் வந்தது:
இது காட்டுத் தீப் போல சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். முதலில் நயன்தாரா இதை சொன்னதும் சிரிப்புதான் வந்தது என அந்தணன் கூறினார்.
அது மட்டுமல்ல ஒரு விதத்தில் நயன்தாராவுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏனெனில் இதே மாதிரி ஒரு புகார் எங்கள் மீது வேறொருவர் கொடுக்கும்போது அவரிடம் நாங்கள் பணம் வாங்கி விட்டதாக பெரும் குற்றச்சாட்டை வைத்தார்.
அது எங்கள் மீது அவர் வைத்த ஒரு தவறான விமர்சனம். அதற்கு நயன்தாரா பரவாயில்லை. அவரைப் பற்றி பேசி தான் நாங்கள் பணம் சம்பாதிக்கிறோம் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தார். அதுவரைக்கும் சந்தோஷம் .இதற்கு நயன்தாராவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என கூறினார் அந்தணன்.
முன்னதாக அவர் சொன்னது யோகி பாபுவை பற்றி தான். ஏற்கனவே யோகி பாபுவுக்கும் பிஸ்மி மற்றும் அந்தணனுக்கும் இடையே சோசியல் மீடியாவில் பெரும் மோதல் ஏற்பட்டது. அதை குறிப்பிட்டு தான் இப்படி பேசி இருந்தார் அந்தணன்.மேலும் நயனை பொறுத்த வரைக்கும் அவர் உடன் வரும் உதவியாளர்களிலிருந்து அவர்களுக்கு செலவாகும் பொருட்கள் வரைக்கும் அனைத்துமே தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்துதான் பெற்றுக் கொண்டு கொடுக்கிறார் நயன்தாரா. அதுவும் தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவே மூன்று உதவியாளர்களை நியமித்திருக்கிறார் நயன்தாரா.
அப்பார்ட்மெண்டில் அலப்பறை:
இதைப் பற்றி நாங்கள் பெருமளவு பேசியதால் ஒருவிதத்தில் இது நயன்தாராவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் .மேலும் அவருடைய அப்பார்ட்மெண்டில் அவரை தவிர யாரும் இருக்கக்கூடாது என நினைப்பவர். ஒரு ஃபுட் டெலிவரி மேன் வந்தாலும் அச்சத்திலேயே தான் அவர் செல்ல வேண்டியதாக இருக்கிறது .
உதாரணமாக அப்பார்ட்மெண்டில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு ஒரு மூன்று சிறுவர்கள் வந்து விளையாடிக் கொண்டிருக்க ரீல்ஸ் மோகத்தில் அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்களாம். அந்த நீச்சல் குளத்தின் அருகில் நயன்தாரா அவருடைய குழந்தைகளுடன் இருக்க அந்த வீடியோவில் தங்கள் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என கருதி அந்த சிறுவர்களை அழைத்து அதை அழிக்க சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் நாங்கள் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து இருந்தோம். இதுதான் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அந்தணன் கூறினார்.