
Cinema News
ரஜினிக்கும் விஜய்க்கும் இடையில் என்ன பகை? வெளியில் தெரியாத உண்மையை சொன்ன பிரபலம்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவை பொருத்தவரை இதுவரை வெளிவந்த எந்த திரைப்படமும் பெரிய ரெகார்ட் பிரேக் கலெக்ஷன் கொடுக்கவில்லை என்பதே உண்மை. இதற்கு முன் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ’தக் லைப்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
இதனால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் கூலி படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறனர். மற்றொரு பக்கம் இதே மாதத்தில் விஜய் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். இந்த மாதத்தில் இருவரும் தங்கள் பங்கிற்கு தூள் கிளப்ப தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி தாக்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் உண்மையில் ரஜினி மற்றும் விஜய்க்கும் இடையில் என்னதான் பகை என்று பேசியுள்ளார் முத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகர்மான வலைப்பேச்சு பிஸ்மி மேலும் அவர் கூறுவது,

“ இன்னும் மூன்று நாட்களில் கூலி படம் வெளியாக உள்ளது. எனக்குத் தெரிந்து ரஜினி ரசிகர் ஒருவர் அந்த ட்ரெய்லரை மட்டும் 50 தடவை பார்த்துள்ளார். ஆனால் ஒரு காமன் ஆடியன்ஸ் பார்வையில் இன்னும் ட்ரெய்லர் பெட்டராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ரஜினிக்கும் விஜய்க்கும் தற்போது மிகப் பெரிய போட்டி இருக்கு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ மற்றும் மாஸ்டர் திரைப்படங்கள் ஒரு இயக்குனராக அவருக்கு தனி அடையாளத்தை பெற்று கொடுத்தது”.
”இருப்பினும் லோகேஷின் சிறந்த படங்கள் கைதி மற்றும் விக்ரம் என குறிப்பிடுவது ஏன் என்றால்? விஜய் படத்தை பற்றி ரஜினி மேடையில் பேசினால் அவர் தப்பாக நினைப்பார் என்று கூட இருக்கலாம். ஆனால் ரஜினிக்கும் விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விரோதமும் பகையும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பல பேருக்கு தெரியாத உண்மை கூட சொல்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரணும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரால் வர முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.”

”ஆனால் விஜய் அதற்கு எதிர்மறையாக அரசியலில் களமிறங்கி உள்ளார். இது ஒரு பக்கம் ரஜினிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் தன்னுடைய படத்திற்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற கவலை அவருக்கு இருந்திருக்கும். விஜய்க்கு கட்சி தொடங்குவதற்கு சில அடிப்படை தேவைகள் இருந்தது. அந்த விஷயத்தை அவர் செய்து முடித்தாரா? இல்லையா? என்று ரஜினிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருக்கு நெருக்கமான இரண்டு பேர், ஒருத்தர் இயக்குனர் ஒருத்தர் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்”.
“இவர்கள் இருவரும் ரஜினியுடனும் நெருக்கமாக இருப்பார்கள் விஜய்யுடனும் நெருங்கி பழகக் கூடியவர்கள். அதன் அடிப்படையில் ரஜினி இந்த விஷயங்களை விஜய் கிட்ட நான் சொன்னேன்னு சொல்லுங்க. அப்படின்னு சொல்லி அனுப்பியுள்ளார். அந்த அளவுக்கு விஜய் மீது ரஜினிக்கு அன்பும் உண்டு அக்கறையும் உண்டு. ஆனால் வெளியில் இந்த காக்கா கழுகு என ரசிகர்களின் முட்டல் மோதல் இதையெல்லாம் வைத்து ரஜினிக்கும் விஜய்க்கும் செட்டாகாது. விஜய் பற்றி பாராட்டினால் ரஜினி விரும்ப மாட்டார். என நினைத்துக் கொண்டு ரஜினி மேடையில் விஜய் படங்களை புறக்கணிக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்”. இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.