
Cinema News
விஜயை காலி பண்ண துடிக்கும் பி.டி செல்வகுமார்.. பின்னணியில் இருக்கும் மர்மங்களை உடைத்த பிரபலம்
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி மற்றும் கிச்சா சுதீப் ஆகிய நடிப்பில் உருவான திரைப்படம் ”புலி”. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருப்பார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் அசத்தலாக வந்திருக்கும். அதுவரை அதிரடி கமர்சியல் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் குழந்தைகளுக்கான பேண்டஸி திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார்.
படம் முழுக்க பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்திருப்பார். விஜய் உடன் நாளைய தீர்ப்பு படத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும் செல்வகுமார் புலி படத்தின் மூலம் முதல் முதலாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். சினிமாவில் நீண்ட நாட்களாக விஜய் மாதிரி ஒரு ஹீரோவுடன் பயணிக்கும் போது அவரை வைத்து தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வருவது இயல்புதான்.

அப்படி அவர் புலி படம் எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார். அதன் பிறகு விஜய் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னேறிக் கொண்டிருக்கையில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் விஜய் எனக்கு துரோகம் செய்துவிட்டார். விஜய் என்னை மதிக்கிறதே கிடையாது. அப்படி இப்படி என்று அவரைப் பற்றி youtube சேனலில் கூறி வந்தார். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி இந்த பிடி செல்வ குமாரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அதில்
“ இன்று விஜய் என்கிற ஒரு மனிதர் இல்லையென்றால் பி.டி.செல்வகுமார் என்ற நபர் இன்று கிடையாது. பி.டி.செல்வகுமார் ஜெமினி சினிமா பத்திரிகையில் விளம்பரம் வாங்கி தரும் வேலையில் இருந்தார். அவருக்கு மாதம் 1500 ரூபாய் சம்பளம். விளம்பரம் வாங்கி கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் .அப்படி இப்படி என்று ஒரு 2000 ரூபாய்தான் அவருடைய சம்பளமாக இருக்கும். ஆனால் இன்றைக்கு அவருக்கு சென்னையில் 10 வீடுகள் இருக்கு. அது மட்டும் இல்லாமல் அவரின் சொந்த ஊரில் நிலங்கள் சொத்துக்கள் என்று நிறைய இருக்கிறது”.

”ஒரு பத்திரிகையில் சாதாரண விளம்பரம் வாங்கி தரும் நபரால் எப்படி இவ்வளவு சம்பாதிக்க முடிந்தது. இவர் உடன் சம காலங்களில் வேலை பார்த்த பத்திரிகையாளர்கள் இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்ததற்கு காரணம் விஜய் தான். அவரை ஒரு இரும்பு திரை போல் சூழ்ந்து கொண்டு விஜய் நடிக்கிற படமா என் மூலமா பைனான்ஸ் வரணும், அந்தப் படத்தை நான் தான் பிசினஸ் செய்ய வேண்டும். என்று மீடியேட்டராக இருந்து படங்களை விற்பனை செய்து கொடுப்பது என தனி ஒரு ஆளாய் செய்து விஜயயை வைத்து நூறு கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டார்”.
”அப்படிப்பட்ட செல்வகுமாரை புலி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தினார். படம் வெளியாகும் சாமத்தில் தயாரிப்பாளரின் வீட்டில் இன்கம் டேக்ஸ் ரைட் நடைபெற்றது. உடனே பி.டி.செல்வகுமார் விஜய்க்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட விஜய் இவ்வளவு நாள் நாம் பாம்புக்கு பால ஊத்திட்டோம் என்று தனது தப்பை உணர்ந்து அவரை ஒதுக்கி வைத்து விட்டார்”.
”அதன் பிறகு ரியாஸ் என்பவரை பி.ஆர்.ஓவாக வைத்துக்கொண்டார். இன்று அரசியலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது செல்வகுமார் என்ன செய்கிறார் என்றால் இந்த சமயத்தில் விஜயுடன் சேர்ந்து கொண்டால் புஸ்ஸி ஆனந்த் இடத்தை பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் எனக்கே சில லட்சங்கள் கொடுத்து விஜயைப் பற்றி தப்பாக பேச சொன்னார்”.
”அது நடக்கவில்லை என்பதால் ஒவ்வொரு யூட்யூப் சேனலில் சென்று இவரை தப்பு தப்பாக பேசுவது தப்பா பேசுபவர்களுக்கு பணம் கொடுப்பது என்று செயல்பட்டு வருகிறார். தனக்கு வாழ்க்கை கொடுத்த விஜய்க்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறார் பிடி செல்வகுமார். உண்மையிலே அதை வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம் தான்”. என்று கூறியுள்ளார்