தைரியம் இருந்தா இத பண்ணுங்க.. நயன்தாராவுக்கு ஓப்பன் சேலஞ்ச் விட்ட பிஸ்மி

by Rohini |
bismi
X

bismi

நயன்தாரா:

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்து வரும் பேட்டியால் மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறார். அதில் சினிமாவைப் பற்றியும் அவருடைய சினிமா அனுபவங்களை பற்றியும் பல செய்திகளை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ஒன்று அவருடைய லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி. தமிழ் சினிமாவில் ஒரு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தனக்கு இந்த பட்டத்தின் மீது விருப்பமே இல்லை என்றும் நானாக யாரிடமும் சென்று பட்டம் வேண்டும் என கேட்கவில்லை என்றும் அதற்கு நான் ஆசைப்படவும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஓப்பன் சேலஞ்ச்:

அது மட்டும் அல்ல என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தொடர்ச்சியாக எனக்கு அந்த பட்டம் வேண்டாம் என கெஞ்சிக் கொண்டுதான் இருந்தேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இவர் கூறிய இந்த தகவலை பகிர்ந்து வலைப்பேச்சு பிஸ்மி நயன்தாராவுக்கு எதிராக ஒரு சேலஞ்ச் விட்டிருக்கிறார்.

இதற்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். முக்கியமாக நயன்தாராவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு தெரியும். இதில் கூடுதல் தகவல் என்னவெனில் அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களிடம் அக்ரிமெண்ட் போடும்போது லேடி சூப்பர் ஸ்டார் என்பதை டைட்டிலிலும் பப்ளிசிட்டிலும் போட வேண்டும் என்று சொல்லி தான் அந்த அக்ரிமெண்டில் கையொப்பமிடுவாராம் நயன்தாரா.

கெஞ்சிய நயன்:

அண்ணாத்த படத்தின் போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட வேண்டும் என சொல்ல சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி சார் படத்தில் வேறு யாருக்கும் எந்த பட்டமும் நாங்கள் டைட்டிலில் போட மாட்டோம் எனக் கூறியிருக்கிறார்கள்.

அதன் பிறகு நயன்தாரா சிறுத்தை சிவாவிடம் போய் இதைப் பற்றி பேசியிருக்கிறார். அதன் பின் சிறுத்தை சிவா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சென்று நயன்தாரா மிகவும் டார்ச்சர் செய்வதாகவும் டைட்டிலில் அந்த பட்டத்தை போட்டு விடலாம் என்று சொன்னதால்தான் அண்ணாத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என டைட்டிலில் போட்டிருக்கிறார்கள்.


தைரியம் இருக்கா:

இதில் நாம் நயன்தாராவிடம் சொல்ல வருவது என்னவெனில் ஆங்கில ஊடகங்களில் இப்படி எல்லாம் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். அது உண்மை இல்லை என நாங்கள் சொல்கிறோம். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் பக்கம் உண்மை இருந்தால் நீங்கள் கடைசியாக நடித்த பத்து படங்களுடைய அக்ரீமெண்ட் பேப்பரை உங்கள் சோசியல் மீடியாக்களில் பகிருங்கள். அதில் இந்த கண்டிஷன் இல்லை எனில் அதன் பிறகு என்ன என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வலைப்பேச்சு சார்பாக பிஸ்மி சேலஞ்ச் விட்டிருக்கிறார்.

Next Story