கமலை உலுக்கிய அந்த சம்பவம்.. ரஜினி கமல் சேராததற்கு காரணமே இதுதானா?..
தமிழ் சினிமா ஆளுமை :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80 காலகட்டத்தில் இருவரும் தங்கள் பயணத்தை தொடங்கினர். ஆரம்ப காலத்தில் பெண்களின் காதல் மன்னனாக கமல்ஹாசன் இருந்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் ரஜினியை விட கமலுக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காரணம் ஒரு ஹீரோ என்றால் நல்ல கலர், உயரம், அழகான வசன உச்சரிப்பு, டான்ஸ் ஆடும் திறன் என எல்லாமே கமலிடம் இருந்தது.
அதனால் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருந்தது. சமகாலங்களில் உதயமான ரஜினி தமிழ் சினிமாவில் இதுவரை ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை உடைத்து வந்தார். தென்னாட்டு நிறம் வேகமான வசன உச்சரிப்பு என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஸ்டைலயும் சேர்த்துக் கொண்டு மக்களின் மனங்களில் இடம்பிடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து சுமார் 10 படங்களில் நடித்தனர்.
திடீரென இருவரும் பிரிந்து தனித்தனி பாதையில் பயணிக்க தொடங்கி விட்டனர். ரஜினிக்கும் கமலுக்கும் இடையே நடந்த எதிர்பாராத சம்பவத்தால் கமல் இனி ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துள்ளார் என மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். அதில்,” 46 வருடங்கள் கழித்து ரஜினி, கமல் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்க உள்ளார்கள்.
ரஜினி-கமல் பிரிய காரணம் :
இவ்வளவு காலம் ரஜினியும் கமலும் ஏன் பிரிந்தார்கள்? என்பதற்கான காரணங்கள் இருக்கிறது. அதில் ரஜினி மன ரீதியான பாதிப்பில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஒரு பத்திரிக்கையாளரை கார் ஏற்றி கொள்வதற்கு முயற்சி செய்தார், என்பதெல்லாம் வரலாறு இருக்கிறது. ஒரு முறை ’அலாவுதீனும் அற்புதவிளக்கும்’ படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ரஜினி கமலுக்கும் இடையே வாள் சண்டை நடக்கிறது.
”ரஜினியின் வாள் சண்டை இது நடிப்பு என்பதை தாண்டி உண்மையான ஒரு வேகம் வெளியானது. அதேபோல ரஜினி நிஜமாகவே கமலை குத்துவதற்கு try பண்ணினார். அதன் பிறகு ரஜினிக்கு மனரீதியான சிக்கல்கள் இருக்கிறது என்று தெரிந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதை கமல் தவிர்த்தார் என்று செய்திகள் இருக்கிறது”.
கமலின் முடிவு :
”இது ஒரு சம்பவம் மற்றொருபுறம் ரஜினி, கமல் இருவருமே இனிமேல் நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம் தனித்தனியாக பயணிப்போம் ஏனென்றால் நம்மளை வைத்து மற்றவர்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் தனித்தனியே பயணித்தால் நமக்கான லாபத்தை நாம் பெற முடியும் என்று முடிவு எடுத்து தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள்”.
”இந்த இரண்டு சம்பவமே உண்மைதான். என்று கூறியுள்ளார். இதனால்தான் ரஜினியும் கமலும் தனித்தனியாக பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்”. என்று கூறியுள்ளார். மீண்டும் 46 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைய உள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது மட்டுமன்றி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
