Connect with us
radhika

Cinema News

மேடையில் நடிகையை அப்படி பேசலாமா? குஷ்பூ, ராதிகாலாம் எங்க போனாங்க?

Kushboo Radhika: சமீப காலமாக சினிமா துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பல பேர் குரல் கொடுத்து வருகின்றனர் .அதுவும் ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சினைகளை எதிர் கொண்ட சில நடிகைகள் நடந்த நேரத்தில் அதை வெளிப்படுத்தாமல் பல வருடங்கள் கழித்து இப்போது அதை ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகின்றனர்.

அதுதான் ஏன் என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். அதுவும் ராதிகா மலையாள படத்தின் ஒரு படப்பிடிப்பில் கேரவனில் கேமரா பொருத்தி இருந்ததை நானே பார்த்து இருக்கிறேன் எனக் கூறியிருந்தது தான் மிகவும் வைரலானது. எதையும் தட்டிக் கேட்கும் ராதிகா ஏன் அந்த சமயத்தில் கேமரா பொருத்தியதைப் பற்றி யாருக்கும் ஏன் தெரியப்படுத்தவில்லை?

இதையும் படிங்க:கோடிலாம் இல்ல.. கோட் படத்தில் மைக் மோகன் சம்பளமே இவ்வளவுதான்!…

அதை ஏன் அவர் தட்டிக் கேட்கவில்லை என அவரை அனைவரும் கேட்டு வந்தனர். இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி குஷ்பூ மற்றும் ராதிகாவிற்கு எதிராக சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். பொதுவாக அட்ஜஸ்ட்மென்ட் என்பது எல்லா துறைகளிலும் நடந்து வருவது. அதில் பல நடிகைகள் வாய்ப்புகள் பறிபோய் விடுமே என நினைத்து இந்த மாதிரி சிக்கல்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.

ஆனால் ஒரு சில பேர் அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டுமா என நினைத்து அதை மறுத்து விடுவதும் உண்டு. ஏன் பெரிய பெரிய பிரபலங்களே இதை சாதாரணமாக நினைத்து தான் பேசி வருகிறார்கள். ரஜினி கூட ஹேமா கமிட்டியை பற்றி எனக்கு தெரியாது எனக் கூறியது பல பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:விவாகரத்து ஆன நேரம்! ஜெயம் ரவிக்கு அடிச்ச பம்பர் ஆஃபர்..அடுத்தடுத்து ஜாக்பாட்தான்

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விசித்திரா இந்த கேள்வியை ரஜினியின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் என கூறியிருந்தார். அதைப்போல பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு திரைப்பட விழா மேடையில் ஒரு நடிகையை அழைத்து மேலிருந்து கீழாகப் பார்த்து  ‘எனக்கு சினேகன் எழுதிய கவிதை வரிதான் ஞாபகம் வருகிறது. இப்பவே எனக்கு பசிக்கிறது’ என கே ராஜன் கூறினார்.

அதே மேடையில் இருந்த இயக்குனர் பேரரசு ராஜன் பேசியதை கேட்டு கைதட்டி சிரித்தார். இப்படி எல்லாம் பேசுவது ஒரு அநாகரிகமாக தெரியவில்லையா? ஒரு அருவருக்கத்தக்க பேச்சு .ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு ராஜன் இப்படி பேசியதை யாருமே கண்டிக்கவில்லையே.

இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!

தமிழ் சினிமாவில் பெரிய ஜான்சி ராணிகளாக இருக்கும் குஷ்பூ ராதிகா எல்லாம் எங்கே போனார்கள்? இவர் பேசியதற்க்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா இல்லையே? ஏன் கஸ்தூரி கூட இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. குஷ்பூ ராஜன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏனென்றால் ராஜன் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக இருக்கிறார்.

அவருக்கு எதிராக ஏதாவது பேசினால் அவருடைய கணவர் சுந்தர் சியின் படங்கள் ரிலீஸுக்கு ஏதாவது இடையூறு வந்து விடுமோ என நினைத்துதான் குஷ்பூ வாயை மூடிவிட்டார் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top