Connect with us

Cinema News

லவ் அண்ட் லவ் ஒன்லி!.. காதலர் தினத்தை கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்த படங்கள்.. எல்லாமே தரம்!

காதலர் தினத்தை கொண்டாட சென்னையில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள படங்களின் லிஸ்ட் காதலர்களுக்கு சரியான லவ்வர்ஸ் டே ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி ஆண்டுதோறும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிஜ காதலை விட சினிமாவில் பல்வேறு வித்தியாசமான காதல் படங்களும் காதலர்களை காதலிக்கத் தூண்டு படங்களும் காதலர்கள் எப்படி இருக்க வேண்டும் காதலன் தன்னிடம் எப்படி அன்பை பொழிய வேண்டும், காதலி எப்படி உருகி உருகி காதலிக்க வேண்டும் என சினிமாவில் பல படங்களில் காதலை பல பரிமாணங்களில் காட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: ரஜினி கேட்ட சம்பளம்.. வாய்ப்பை வேறொரு நடிகருக்கு கொடுத்த இயக்குனர்! அப்படி என்ன கேட்டார்?

கடந்த வாரம் காதலர் தின ஸ்பெஷலாகவே புதிய படமாக வெளியான ‘லவ்வர்’ படத்தை பார்க்க இன்று பல காதல் ஜோடிகள் படையெடுக்க உள்ளனர். இந்நிலையில், அந்த படத்திற்கு டஃப் கொடுக்க ஏற்கனவே வெளியான பல சூப்பர் ஹிட் காதல் படங்களும் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன.

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கிய 96 திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இதையும் படிங்க: வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்ளும் மணிகண்டன்!.. லவ்வர் படத்துல இப்படியொரு சீன் இருக்கா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, திவ்யா, சமீரா ரெட்டி மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம், ஜீவா மற்றும் அனுயா நடித்த ஜாலியான காதல் மற்றும் காமெடி கலந்த சிவா மனசுல சக்தி, காதலர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான விண்ணைத் தாண்டி வருவாயா, கெளதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடிப்பில் வெளியான மின்னலே மற்றும் தளபதி விஜய், அசின் நடிப்பில் வெளியான காவலன் மற்றும் பரத் நடிப்பில் வெளியான லவ் உள்ளிட்ட பல படங்கள் இன்று காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகி உள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top