Categories: Cinema News latest news throwback stories

எம்.ஜி.ஆரிடமே சிவாஜியை பாராட்டிய வாலி!.. எம்.ஜி.ஆர் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?!…

திரையுலகில் எம்.ஜி.ஆர் ஒரு துருவம் எனில் சிவாஜி மற்றொரு துருவம். எம்.ஜி.ஆர் சண்டை படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது போல சிவாஜி நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருந்தது போலவே சிவாஜுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.

Sivaji Ganesan and MGR

பொதுவாக திரையுலகில் ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பற்றி புகழ்ந்து பேச மாட்டார்கள். ஏனெனில், போட்டி பொறாமை நிறைந்தது சினிமா உலகம். ஆனால், எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் அப்படி இல்லை. எம்.ஜி.ஆரை எங்கு பேசினாலும் அண்ணன் என பாசமாக பேசுவார் சிவாஜி. அதேபோல், சிவாஜியை பல மேடைகளிலும் புகழந்து பேசியவர் எம்.ஜி.ஆர்.

Kavingnar Vali

இதுபற்றி வாலி பகிர்ந்து கொண்ட சம்பவம் இது. ஒருமுறை நானும், எம்.ஜி.ஆரும் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ஒரு புதிய படத்தை பார்த்தோம். அந்த படத்தில் அசோக மன்னனாக சிவாஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் முடிந்ததும் ‘சிவாஜி மாதிரி ஒரு நடிகன் இங்க யாரும் இல்ல.. நீங்க என்ன சொல்றீங்க’ என எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டேன். அறிவுள்ள யாரும் அப்படி கேட்க மாட்டார்கள். ஏனெனில், அது நடிகர்களின் ஈகோவை தூண்டிவிடும். ஆனால், எம்.ஜி.ஆர் அப்படி ரியாக்ட் செய்யவில்லை. நீங்கள் சொல்வது உண்மைதான். சிவாஜி ஒரு சிறந்த நடிகர்தான். அவர் போல் யாருமில்லை என்றாலும் அவருக்கு அடுத்து ஒரு நடிகர் இருக்கிறார். அவர்தான் முத்துராமன்’ என கோபப்படாமல் சொன்னார். அவர்தான் எம்.ஜி.ஆர்’ என வாலி கூறியுள்ளார்

Published by
சிவா