
latest news
செல்லாது… செல்லாது.. ஜோதிகாவின் முதல் படம் அஜித் கூட இல்ல… விஜய் படம் தானாம்…
Published on
By
நடிகை ஜோதிகாவோட முதல் படம் என்னவென்று கேட்டால் அஜித்தின் வாலி என்கிற பதில்தான் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும். ஆனால், அவர் நடித்த முதல்படம் விஜய் படம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா… அப்படி ஒரு விநோத ஒற்றுமை உண்டு.. அதைத் தெரிந்துகொள்வோமா?
ஜோதிகா 1999-ல் வாலி மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பின்னர், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: திரிஷாவை இப்படியா பண்ணுவீங்க மிஸ்டர் சிரஞ்சீவி… அம்மணியோட டயட்டைக் கெடுத்துட்டீகளே..!
தனது சினிமா பயணத்தில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த சமயத்தில் சக நடிகரான சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ஏழு படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 36 வயதினிலே படம் மூலம் கம்பேக் கொடுத்த ஜோதிகா, தனது படங்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறார்.
தமிழில் ஜோதிகா நடித்த முதல் படம் அஜித்தின் வாலிதான் என்றாலும், அவரின் சினிமா பயணத்தில் முதன்முதலாக நடித்த படம் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் இந்தி ரீமேக்கில்தான். காதலுக்கான புது இலக்கணத்தை உருவாக்கியிருந்த அந்தப்படத்தை இந்தியில் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் ரீமேக் செய்திருந்தார்.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்திற்கு வெங்கட் பிரபு சொன்ன புரமோஷன் இதுதானா? இவ்ளோ பெருசா?
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘டோலி சாஜா கீ ரக்னா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ஜோதிகா. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தி ரீமேக்கில் இருந்து பாட்டுக்களை எடுத்து தமிழில் பிரசாந்த் நடித்த ஸ்டார் படத்தில் பயன்படுத்தியிருப்பார். காதலுக்கு மரியாதையில் ஷாலினி நடித்திருந்த பாத்திரத்தில்தான் இந்தியில் ஜோதிகா நடித்திருந்தார்.
இதை தொடர்ந்தே தமிழுக்கு வந்த ஜோதிகா வாலியில் நடித்து தொடர்ந்து கோலிவுட்டில் முக்கிய இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு...
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...