vali
சினிமாவில் யார் எப்படி பெரிய ஆளாக மாறுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. அதேபோல் பல அவமானங்களை சந்தித்துவிட்டுதான் சினிமாவில் ஒரு இடத்தையும் பிடிக்க முடியும். தயாரிப்பளர், இயக்குனர் மற்றும் நடிகர்களின் வாரிசாக இருந்துவிட்டால் சினிமாவில் நுழைவது சுலபம். இல்லையேல் படாத பாடு படவேண்டும்.
வாய்ப்புக்காக பல சினிமா கம்பெனிகளின் படிகளில் ஏறி இறங்க வேண்டும். போட்டி, பொறாமை அதிகம் இருக்கும் சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. நமக்கு கிடைக்கும் சின்ன வாய்ப்பை கூட தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். அதையெல்லாம் மீறி சின்ன சின்ன வேடங்களில் நடிக்கதுவங்கி சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க திறமை மட்டுமல்ல, உழைப்பு, நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்புகள் வராது.
கவிஞர் வாலியை எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் தனுஷ், சிம்பு காலம் வரை எல்லோருக்கும் பாடல்களை எழுதியவர். எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவர் சினிமாவில் பாட்டு எழுத முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் இவருடன் ஒருவர் தங்கியிருந்தார். அவர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒல்லியான தேகம், முகப்பரு ஏற்பட்டு தழும்புள்ள முகம் என சினிமா நடிகருக்கான எந்த லட்சணமும் முகத்தில் இருக்காது, அவரை பார்த்த வாலி இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு இவனெல்லாம் சினிமாவில் எப்படி நடிக்க ஆசைப்படுகிறான் என யோசித்தாராம். ஆனால், அதே நடிகர் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று பெரிய காமெடி நடிகராக மாறி சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் அவரின் கால்ஷிட்டுக்காக காத்திருந்தனர். அவர்தான் நடிகர் நாகேஷ்.
காமெடி, குணச்சித்திரம், வில்லன் என கலக்கியவர் நாகேஷ். மிகவும் அசாத்தியமான நடிகர் இவர். கமல்ஹாசன் எப்போதும் அவரை எல்லா இடத்திலும் சிலாகித்து பேசுவார். அதேபோல், அவர் தயாரித்த பல படங்களில் முக்கிய வேடங்களில் அவரை நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…