×

வலிமை செட்டில் அஜித் செய்த காரியம்... ரகசியத்தை பகிர்ந்த நடிகை....

 
valimai

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாம். அதை வெளிநாட்டில் எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டிருப்பதால் எது எப்போது எடுக்கப்படும் என தெரியவில்லை. 

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துடன் நடித்த நடிகை சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரியஸில் நடித்தவர் நடிகை ஜானகி. இவர் வலிமை படத்தில் அஜித்தின் அண்ணியாக நடித்துள்ளார். அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்த அவர் ‘அஜித் மிகவும் அன்பானவர். 

புதுமுக நடிகை என்றெல்லாம் பார்க்க மாட்டார். எல்லோருக்கும் மரியாதை அளிப்பார். ஹைதராபாத்தில் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருந்த போது நடிக்க மிகவும் சிரமப்பட்டோம். இதை புரிந்து கொண்ட அஜித் தனது கேரவேனுக்கு சென்று சிக்கன் சூப் தயாரித்து எல்லோரும் கொடுத்தார். 

எனது குழந்தையை படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றேன். அவனுடன் மிகவும் அன்பாக பழகினார். வலிமை படம் வெளியாகும் போது இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். இப்படத்தின் வெளியீட்டை நானும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News