சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் காலா படத்தில் நடித்த ஹுமா குரோஷி முக்கிய வேடத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பல பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இப்படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், படத்தின் புரமோஷன்கள் துவங்கியுள்ளது. இப்படம் தொடர்பான புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.
அஜித்தும், ஹீமா குரோஷியும் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து கொண்டு ஸ்டைலாக நடந்து வரும் புகைப்படம் இன்று காலை இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், இப்படத்தின் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…