தமிழ் சினிமாவில் இந்த வசூல் பிரச்சனை பெரும் பிரச்சனையாக தான் மாறி வருகிறது. அந்த நடிகர் இத்தனை நூறு கோடி சம்பாதித்து விட்டது. இந்த நடிகர் திரைப்படம் இந்த ஏரியாக்களில் அதிக வசூல் சாதனை வைத்துள்ளாது ஏன், எங்கள் தலைவர் படம் அதிக முன்பதிவு ரெக்கார்ட் வைத்துள்ளது என்று தான் அடித்துக்கொள்கிறார்கள்.
ஆனால், எந்த ரசிகரும், தனது ஆஸ்தான நடிகர் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அந்த பட கதை தேர்வு நன்றாக இருந்தது என்று பார்ப்பதில்லை. அப்படிதான் அவர்களின் மார்க்கெட் நிலவரமும் கணக்கிடப்படுகிறது.
அப்படிதான் அன்மையில் ஒரு வசூல் சர்வே ரிப்போர்ட் வந்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதி அடுத்தடுத்த நாட்களில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படமும், யாஷ் நடிப்பில் கே.ஜி.எப் 2 திரைப்படமும் வெளியாகி இருந்தது.
இதில், பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களேயே பெற்றது. இருந்தாலும் விஜய் படம் என்பதால், வழக்கம் போல முதல் வாரம் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாகவே ஓடின. கே.ஜி.எப் 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸையே கதிகலங்க வைக்கும் அளவுக்கு பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இதையும் படியுங்களேன் – ரஜினி கொடுத்த ‘அந்த’ ஷாக்.! மீள முடியாமல் தவித்த கமலின் ஃபேவரைட் நடிகர்.!
இதில் சென்னையில் பீஸ்ட் திரைப்படம் ஏற்கனவே 10 கோடியை கடந்த நிலையில், தற்போது கே.ஜி.எப் 2 திரைப்படமும் தற்போது அந்த சாதனையை பெற்றுள்ளது. மேலும் ஒரு தகவல் என்னவென்றால், சென்னையில், 10 வசூல் செய்த 2022இன் இரண்டாவது படம் கே.ஜி.எப் 2 என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் தான் அஜித்தின் வலிமை, ராஜமௌலி இயக்கத்தில் RRR என பெரிய படங்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த இரு படங்களுமே சென்னையில் 10 கோடி வசூலை தாண்டவில்லை என்றே கூறப்படுகிறது.
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…