Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டுமில்ல… மோஷன் போஸ்டரும் வருது.. தெறிக்கும் வலிமை அப்டேட்….

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டுமில்ல… மோஷன் போஸ்டரும் வருது.. தெறிக்கும் வலிமை அப்டேட்….

98bf88d3ac67643b0e1bf1c7f03be34e

பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கி வருகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகைய் யார் என்கிற தகவல் கூட வெளியாகவில்லை.

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு ரசிகர்களுக்கு ஆறுதல். வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு ‘ விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவோம்’ என வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்தும் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

ef8da8a2496d9285bc625121423c66b0

இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிகிறது. பைக்கை மிகவும் வேகமாக ஓட்டும் பைக் ரேசர்களை வைத்து திருட்டு உள்ளிட்ட பல குற்றங்களை இப்படத்தின் வில்லன் கார்த்திகேயா செய்து வருகிறார். அதை போலீஸ் உயர் அதிகாரியான அஜித் எப்படி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் கதை என்பது தெரியவந்துள்ளது.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவது பற்றி படக்குழு ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதன்படி ஜூலை 3 வாரத்தில் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும், அநேகமாக ஜூலை 15ம் தேதி அஜித்தின் செண்டிமெண்டான  வியாழக்கிழமை வருவதால் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

8aa62e2f32aea746a2975d35529c6bda

இந்நிலையில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சிலரும், நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் என சிலரும் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அதோடு,  வலிமை படத்தின் மோஷ்டர் போஸ்டரும் தயாராகி வருவதாகவும் எனவே, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு சேர்த்து மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து தல அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #ValimaiMotionPoster என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top