×

வலிமை ஆகஸ்டில் ரிலீஸ்...ஜுலையில் அடுத்த படம் ஷூட்டிங்... வேகமெடுக்கும் தல அஜித்...

 
வலிமை ஆகஸ்டில் ரிலீஸ்...ஜுலையில் அடுத்த படம் ஷூட்டிங்... வேகமெடுக்கும் தல அஜித்...

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிறது. படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். 

valimai

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்துக்கிடக்கின்றனர். 

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாம். அதை வெளிநாட்டில் எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டிருப்பதால் எது எப்போது எடுக்கப்படும் என தெரியவில்லை. 

ஏனெனில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எந்த நாட்டில் அனுமதி கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. எப்படியும் படப்பிடிப்பை வேகமாக நடத்தி ஆகஸ்டு மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில் 3வது போனிகபூர்- வினோத் - அஜித் இணையும் புதிய படத்தின் பட வேலைகள் ஒருபக்கம் துவங்கிவிட்டடதாம். ஜுலை மாதம் இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என அஜித் கூறியுள்ளாராம். மேலும் இப்படத்திற்காக அஜித் 65 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். மொத்தம் 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வினோத் திட்டமிட்டுள்ளார். வலிமை மாதிரி வருடக்கணக்கில் இழுக்காமல் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற வேண்டும் என வினோத்தும், அஜித்தும் நினைக்கிறார்களாம். 

முடிவு கொரோனா கையில் இருக்கு!...

From around the web

Trending Videos

Tamilnadu News