விரைவில் வலிமை மோஷன் போஸ்டர்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து...
Sat, 19 Dec 2020

தல அஜீத் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டுருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக படத்தின் வேலைகள் அனைத்தும் அப்படியே பாதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.இப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே1ம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வருகிற ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று மாலை வெளியாகவுள்ளது. அதன்பின் தொடர்ச்சியாக வலிமை பற்றிய தகவல் வெளியாகும் எனத்தெரிகிறது. எனவே, 2021ம் ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என நம்பப்படுகிறது.