Categories: Cinema News latest news

சாதனை மேல் சாதனை.! இதுவரை உலக சினிமாக்கள் செய்யாத சாதனை.! அஜித்தின் வலிமை-னா சும்மாவா?!

அஜித் நடிப்பில்வரும் வியாழன் அன்று வலிமை திரைப்படம் கோலாகலமாக வெளியாக உள்ளது. இப்படத்தை வரவேற்க்க அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். கடைசியாக 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வினோத் இயக்கத்தில் வெளியாகி இருந்தது.

அதற்கடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – விஜய் வந்த சிகப்பு காருக்கு இன்சூரன்ஸ் முடிஞ்சிருச்சா.?! இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாகவே உள்ளது. இப்படத்தை புக் மை சோ (BookMyShow) எனும் டிக்கெட் புக்கிங் தளத்தில் இப்படத்திற்க்காக காதிருப்போர், ஈடுபாடு உள்ளோர் லைக் செய்வார்கள்.

இதில் வலிமை திரைப்படம் 2 மில்லியன் ( 20 லட்சம் ) லைக்குகளை கடந்து ஹாலிவுட் திரைப்படங்களை கூட பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. இந்த செய்தியை இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan