ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வலிமை. இப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியானது. போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களை ஒரு பைக் கும்பலை வைத்து செய்யும் வில்லனை போலீஸ் அதிகாரி எப்படி தோற்கடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
2 வருடங்களுக்கு பின் அஜித்தின் படம் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் இப்படத்தை பார்த்து வருகின்றனர். 4 நாட்களுக்கு முன்பே இப்படத்திற்கான முன் பதிவு துவங்கியது. எனவே, முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களிலும் விற்று தீர்ந்தது.
இதையும் படிங்க: ப்ப்ப்பா!…தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்… சொக்கிப்போன நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் மற்றும் அதிக முன்பதிவு செய்த படம் என்கிற சாதனையை வலிமை படம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.33.5 கோடியை வசூல் செய்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விஜயின் சர்கார் திரைப்பம் முதல் நாள் ரூ. 32 கோடி வசூல் செய்திருந்தது. எனவே, அஜித் விஜயை முந்திவிட்டார் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…